

ரஞ்சி கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கர்நாடக அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மகாராஷ்டிர அணியைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது. இது கர்நாடக அணி வென்ற 7-வது ரஞ்சி கோப்பையாகும்.
ஆந்திரத் தலைநகர் ஹைதராபாதில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மகாராஷ்டிரம் 305 ரன்களும், கர்நாடகம் 515 ரன்களும் குவித்தன. முதல் இன்னிங்ஸில் 210 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய மகாராஷ்டிரம் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை 366 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கர்நாடகம் தரப்பில் வினய் குமார், எஸ்.கோபால் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 157 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய கர்நாடக அணி 40.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. உத்தப்பா 36, ராகுல் 29, அமித் வர்மா 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மணீஷ் பாண்டே 28, கே.கே.நாயர் 20 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கர்நாடக வீரர் ராகுல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
கோப்பையை வென்ற கர்நாடக அணிக்கு ரூ.2 கோடியும், 2-வது இடம்பிடித்த மகாராஷ்டிரத்துக்கு ரூ.1 கோடியும் ரொக்கப் பரிசாகக் கிடைத்தன.