கடைசி பந்து அருமையாக வீசப்பட்டது: தோனி பாராட்டு

கடைசி பந்து அருமையாக வீசப்பட்டது: தோனி பாராட்டு
Updated on
1 min read

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வி தழுவியது குறித்து தோனி கூறும்போது, ‘கடைசி பந்து அருமை’ என்றார்.

தோனி 2 ரன்களை எடுக்கும் கவனத்தில் பவுண்டரி பந்துகளை விட்டுவிடுவார் என்பது தற்போது தோனியைத் தவிர உலகறிந்த செய்தியாகிவிட்டது. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வைடாக யார்க்கர் லெந்த்தில் பவுலரை வீசாமல் இருக்கச் செய்ய என்ன செய்ய வேண்டும்? ராபின் உத்தப்பா பாணி ஒன்று உண்டு, ஆஃப் ஸ்டம்ப் லைனில் மேலேறி நடந்து வருவார் புல்டாசாக அதனை மாற்றுவார், இல்லையெனில் டிவில்லியர்ஸ் வழி, கிளென் மேக்ஸ்வெல் வழி ரிவர்ஸ் ஸ்வீப். இந்த இரண்டையுமே தோனி செய்வதில்லை. அதனால்தான் கடைசி ஓவரில் 8 ரன்களைக் கூட எடுக்க முடியாமல் அவர் நின்றுமே இந்தியா தோல்வி கண்டது.

இது பற்றி ஆட்டம் முடிந்து பரிசளிப்பு விழாவில் அவர் கூறியதாவது:

ஆட்டம் கடைசியில் பந்துக்கும் மட்டைக்கும் இடையிலானது. கடைசி பந்து அருமையாக வீசப்பட்டதாக கருதுகிறேன். திறமைக்கேற்ப நாங்கள் விளையாடவில்லை.

அவுட் ஆன ஷாட்கள் பல சக்தியற்றவையாக மாறி கேட்சிங் பிராக்டீஸ் ஆனது. உள்நாட்டு கிரிக்கெட்டில் நன்றாக ஆடலாம், ஆனால் இந்தியா ஏ-யிலிருந்து இந்தியாவுக்கு ஆடும்போது நெருக்கடி அதிகமிருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் அறிமுக வீரர்களுக்கு நல்ல கற்றுக் கொள்ளும் காலக்கட்டம். பேட்ஸ்மென்கள் நிறைய தவறுகள் செய்தனர். பந்து வீச்சில் நமது லெந்த் சரியல்ல.

இவ்வாறு கூறினார் தோனி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in