

இலங்கை கிரிக்கெட் அணி இங்கி லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் லீட்சில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 88 ரன் வித்தி யாசத்திலும், செஸ்டர் லீ ஸ்டீரிட் ரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் கடைசி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.