

இந்தியாவின் உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் ஐ லீக் தொடரின் 10-வது சீசன் போட்டிகள் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இந்த தொடரில் சென்னை சிட்டி எப்சி, மும்பை எப்சி, அய்சால் எப்சி ஷில்லாங் லஜாங் கால்பந்து கிளப், கிங்பிஷர் ஈஸ்ட் பெங்கால், மோகன் பாகன், சிவாஜியன்ஸ் கால்பந்து கிளப், பெங்களூரு கால்பந்து கிளப், மினர்வா பஞ்சாப் எப்சி, சர்ச்சில் பிரதர்ஸ் கிளப் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
போட்டியின் 2-வது நாளான நேற்று சென்னை சிட்டி எப்சி அணி தனது முதல் ஆட்டத்தில் மினவர்வா பஞ்சாப் எப்சி அணியை எதிர்த்து விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகள் தரப்பிலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதனால் ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது.