

கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஜார்க்கண்டை தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது கர்நாடகம். கர்நாடக அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா 133 ரன்கள் குவித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 66 ரன்களும், ராகுல் 67 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய ஜார்க்கண்ட் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜக்கி 141 ரன்கள் குவித்தபோதும், மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடாததால் அந்த அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.