

ஒலிம்பிக் போட்டியில் இருந்து பிரபல டென்னிஸ் நட்சத்திரங்களான மிலோஸ் ரோனிக், சிமோனா ஹாலெப் ஆகியோர் விலகியுள்ளனர். ஜிகா வைரஸ் நோய் அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் ரியோ நகரில் தொடங்குகிறது. இந்நிலையில் போட்டி நடக்கும் பிரேசில் நாட்டில் ஜிகா வைரஸ் நோய் பரவிவருவதாக கூறி இந்த ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள முன்னணி வீரர்கள் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் முன்னணி டென்னிஸ் வீரரும், விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 2-ம் இடம் பிடித்தவருமான ரோனிக், தான் இந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதுபற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், “என் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் நடத்திய ஆலோ சனைக்கு பிறகு ஒலிம்பிக் போட்டி யில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்துள் ளேன். கனத்த இதயத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ரோனிக்கைப் போன்று ஒலிம்பிக் போட்டி யில் இருந்து விலகும் முடிவை தனது பேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ள ஹாலெப், “ஜிகா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். என் மருத்துவர் களிடமும், குடும்ப உறுப்பினர்களிடமும் நடத்திய ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவை எடுத்துள்ளேன். விளையாட்டை விட எனக்கு என் குடும்பம் மிகவும் முக்கியம்” என்று கூறியுள்ளார்.