Published : 25 Jun 2016 11:55 AM
Last Updated : 25 Jun 2016 11:55 AM

குரோஷியா வலுவான அணி: கிறிஸ்டியானோ ரொனால்டோ கருத்து

யூரோ கால்பந்து தொடரில் இன்று நள்ளிரவு நடைபெறும் நாக் அவுட் சுற்று ஆட்டம் ஒன்றில் கிறிஸ்டியானோ ரெனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி, குரோஷியாவை எதிர்த்து விளையாடு கிறது. இந்நிலையில் குரோஷியா மிகவும் பலம் வாய்ந்த அணி என ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

லீக் சுற்றின் கடைசி ஆட்டத் தில் ஹங்கேரிக்கு எதிராக இரு கோல்களை ஆக்ரோஷ மாக அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு கிறிஸ்டி யானோ ரொனால்டோ முற்றுப் புள்ளி வைத்தார். இந்த ஆட்டத்தை டிரா செய்ய உதவிய அவர் போர்ச்சுக்கல் அணி முதல் சுற்றுடன் வெளியேறுவதை தடுத்தார்.

இதனால் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. ஹங்கேரி ஆட்டத்தில் கோல்கள் அடித்ததன் மூலம் நான்கு யூரோ தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்தார்.

இன்றைய ஆட்டத்தில் அவர் கோல் அடித்தால் யூரோ தொடரில் அதிக கோல்கள் அடித்துள்ள பிரான்சின் மைக்கேல் பிளாட்டினி யின் சாதனையை சமன் செய்வார். பிளாட்டினி 9 கோல்கள் அடித்துள்ளார். 8 கோல்கள் அடித்துள்ள ரொனால்டோவுக்கு இந்த சாதனையை நெருங்க ஒரு கோல் மட்டுமே தேவையாக உள்ளது.

எனினும் இன்றைய ஆட்டத்தில் ரொனால்டோ இந்த சாதனையை நிகழ்த்துவது அவ்வளவு எளிதாக இருக்க வாய்ப்பில்லை. ஏனேனில் குரோஷியா பலம் வாய்ந்த அணி. லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினை வீழ்த்தி டி பிரிவில் முதல் இடத்தை குரோஷியா பிடித்திருந்தது.

இதுதொடர்பாக ரொனால்டோ கூறும்போது, “சிறந்த அணியை நாங்கள் எதிர்கொள்கிறோம். வெற்றி வாய்ப்பு இரு அணிக்கும் சம அளவில் உள்ளது. குரோஷியா கடினமான அணி, சிறந்த வீரர்களை கொண்டது. மற்ற அணிகள் ஸ்பெயினை சமாளிக்க முடியாத நிலையில், லீக் சுற்றில் ஸ்பெயினை குரோஷியா வீழ்த்தியுள்ளது. குரோஷியா அணியை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் எங்கள் பலத்தை நாங்கள் அறிவோம்’’ என்றார்.

போர்சுக்கல் பயிற்சியாளர் சான்டோஸ் கூறும்போது, “குரோஷியா அணி சுறா போன்றது. நாங்கள் தவிர்க்க நினைக்கும் அணிகளில் அதுவும் ஒன்று. ஸ்பெயின் அணி உள்ள பிரிவில் அந்த அணி முதலிடம் பிடித்துள்ளது.

இதில் இருந்தே அந்த அணியை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளலாம். இரு கோல்கள் அடித்துள்ளதால் ரெனால்டோவின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. எப்படியும் ரொனால்டோ நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரர் தான், இந்த கோல்கள் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்துக்கு ஊக்கமளிப் பதாக இருக்கும்’’ என்றார்.

அதிக வலிமையுடன் களமிறங்கும் விதமாக குரோஷியா அணியில் இன்று 5 மாற்றங்கள் இருக்கக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது. ரியல் மாட்ரிட் கிளப்பில் ரொனால்டோவின் சக வீரரான லுகா மாட்ரிக் காயத்தில் இருந்து மீண்டுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கு கிறார். மேலும் மரியோ மான்ட்ஸூகிக்கும் இன்று களமிறக்கப்படுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x