

இந்தியாவின் கிரேட் ஏ வீரர்களுக்கு தற்போது ஒப்பந்திக்கபட்ட தொகை மிகவும் குறைவானது என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
குறிப்பாக புஜாராவுக்கு ரூ.2 கோடி என்பது மிகவும் குறைவானது என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு டெஸ்ட் தொடர்களில் அவர் சமீபமாக 1316 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் ரவி சாஸ்திரி கூறும்போது, “ரூ.2 கோடி என்பது ஒன்றுமில்லை, வேர்க்கடலைக்கு ஒப்பானதே. டெஸ்ட் வீர்ரின் மைய ஒப்பந்தத் தொகை கிரேட் ஏ வீரர்களுக்கு இன்னும் கூடுதலாக இருக்க வேண்டும். மிகப்பெரிய அளவிலான தொகையாக அது இருக்க வேண்டும். ரூ.1 கோடியிலிருந்து ரூ.2 கோடி என்று இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது, ஆனாலும் இது போதாது.
புஜாராவுக்கு உச்சபட்ச தொகைக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். உலகில் உள்ள டாப் வீரர்களுக்கு இணையாக புஜாராவுக்கு தொகை நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்படி உயர்த்தியிருந்தால் அவர் ஐபிஎல் ஆடுவதா வேண்டாமா என்ற கவலையில் சிக்க மாட்டார். கவுண்டி கிரிக்கெட்டில் 2 மாதங்கள் ஆடுவதில் அவர் நிறைவுறுவார். நாங்களெல்லாம் 6 மாதகாலம் கவுண்டி கிரிக்கெட் ஆடினோம்” என்றார்.
கிரிக்கெட் ஆஸ்திரேலிய வாரிய ஒப்பந்தத்தின் படி மத்திய ஒப்பந்தத்தில் 20 வீரர்கள் உள்ளனர். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 1.12 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள், அதாவது ரூ.5.53 கோடி பெறுவார். மற்ற 19 வீரர்கள் ரூ.4.45 கோடி பெறுவார்கள். மேலும் டெஸ்ட் போட்டிக்கு வீரர் ஒருவருக்கு 14,000 ஆஸி.டாலர்கள், ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு வீரர் ஒருவருக்கு ரூ.7000 டாலர்கள். டி20 சர்வதேச போட்டிகளுக்கு வீரர் ஒருவருக்கு 5000 டாலர்கள்.
இந்நிலையில் இந்திய கிரேட் ஏ வீரர்களுக்கு இன்னமும் கூடுதல் தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்கிறார் ரவிசாஸ்திரி.