

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனையான பூஜா கட்கார் வெண்கலப் பதக்கம் வென்றார்.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டிகள் டெல்லியில் உள்ள டாக்டர் கார்னி சிங் துப்பாக்கி சுடும் மையத்தில் நடந்து வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் நேற்று நடந்த போட்டியில் இந்திய வீராங்கனையான பூஜா கட்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் இந்தப் பிரிவில் மொத்தம் 228.8 புள்ளிகளைப் பெற்றார். உலகக் கோப்பை போட்டியில் அவர் பதக்கம் வெல்வது இது முதல்முறையாகும்.
இப்போட்டியில் 252.1 புள்ளி களைப் பெற்று சீன வீராங்கனை யான மெங்யோ ஷி தங்கப் பதக்கத் தையும், 248.9 புள்ளிகளைப் பெற்ற சீனாவின் மற்றொரு வீராங் கனையான டாங் லிஜ்ஜி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.