

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி கலந்துகொள்ளும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் களில் 6 விக்கெட் இழப்புக்கு 288 ரன்களை எடுத்தது.
அந்த அணியில் வார்னர் 109 ரன்களையும், கவாஜா 59 ரன்களையும், ஸ்மித் 52 ரன்களையும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தஹிர் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதலில் வேகமாக ரன்களைக் குவித்தது. ஆம்லா (60 ரன்கள்), டூபிளெஸ்ஸி (63 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் அந்த அணி ஒரு கட்டத்தில் 1 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களை எடுத் திருந்தது.
ஆனால் ஆம்லா அவுட் ஆனதும் தென் ஆப்பிரிக்காவின் விக்கெட்கள் சரியத் தொடங்கின. ஸ்டார்க், ஹசல்வுட், சம்பா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்த 47.4 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலிய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 109 ரன்களைக் குவித்த டேவிட் வார்னர் ஆட்ட நாயகனாக தேர்ந் தெடுக்கப்பட்டார்.