இந்தியாவில் விளையாடுவது கடினமே: டேவிட் வார்னர் கருத்து

இந்தியாவில் விளையாடுவது கடினமே: டேவிட் வார்னர் கருத்து
Updated on
1 min read

துணைக்கண்ட சூழ்நிலைகளுக்கேற்ப தயார் செய்து கொள்வது கடினம், இதனால் இந்தியாவில் விளையாடுவது எப்போதும் கடினமே என்று ஆஸ்திரேலிய அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் தெரிவித்தார்.

ஆண்டின் சிறந்த வீரருக்கான ஆலன் பார்டர் விருதை தொடர்ச்சியாக பெற்ற வார்னர், நியூஸிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளார்.

“இந்திய பயணத்திற்காக கிரிக்கெட் ஆஸ்திரேலியா எனக்கு ஓய்வு அளிப்பதற்கு நான் நன்றியுடையவனாகிறேன். ஏனெனில் பாகிஸ்தானுக்கு எதிராக, குறிப்பாக முதல் 2 ஒருநாள் போட்டிகளில் என் கால்கள் நகரவில்லை. சோம்பியதால் அல்ல, சில வேளைகளில் கால்கள் நகருவதேயில்லை. காரணம் கால்கள் களைப்படைந்து விடுகின்றன.

இந்தியாவில் மனரீதியாக உறுதியோடு ஆட வேண்டும். எனவே இந்தியாவில் கிரிக்கெட் ஆடுவதைப் பற்றித் திட்டமிடும் முன்பாக உடல்/மன ரீதியாக நன்றாக தயாராக வேண்டும். இதன் மூலம் மட்டுமே இந்தியாவில் உள்ள கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு ஆட்கொள்ள முடியும். இங்கு வெயில் அதிகம், கிரிக்கெட்டை விட்டுத் தள்ளுங்கள், உஷ்ணத்தை எதிர்கொள்ள வேண்டும்.

எனவே இந்த தட்பவெப்பத்திற்கேற்ப தகவமைத்துக் கொள்ள வேண்டும், நமக்கு இந்த தட்பவெப்பம் சகஜமானதாக வேண்டும்” என்றார் டேவிட் வார்னர்.

பிப்ரவரி 23-ம் தேதி புனேயில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்குகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in