

தேசிய ஜூனியர் ஜூடோ போட்டிகள் சென்னை நேரு விளையாட்டரங்கில் வரும் 26 தேதி முதல் இரு நாட்கள் நடைபெறுகிறது. இதில் 31 மாநிலங்கள் மற்றும் 8 துறைகளை சேர்ந்த அணிகள் என மொத்தம் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த போட்டியை இந்திய ஜூடோ கூட்டமைப்பு, தமிழ்நாடு ஜூடோ சங்கத்துடன் இணைந்து நடத்துகிறது. போட்டி தொடங்கும் நாளன்று இந்திய ஜூடோ கூட்டமைப்பு ஆண்டு பொதுக் குழு கூட்டமும் செயற்குழுவும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஜூடோ சங்கம் கடந்த 2015-ம் ஆண்டு தேசிய சப்-ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியை வெற்றிகரமாக நடத்தியிருந்தது.
இதேபோன்று சீனியர் போட்டியையும் சிறப்பாக நடத்தும் என்ற நம்பிக்கை உள்ளதாக இந்திய ஜூடோ கூட்டமைப்பின் தலைவர் முகேஷ் குமார் தெரிவித்தார்.