விராட் கோலிக்கு டி வில்லியர்ஸ் நெருக்கடி

விராட் கோலிக்கு டி வில்லியர்ஸ் நெருக்கடி
Updated on
1 min read

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசைப் பட்டியிலில் இந்திய வீரர் விராட் கோலிக்கு தென்னாப்பிரிக்க கேப்டன் டி.வில்லியர்ஸ் கடும் நெருக்கடியை அளித்துள்ளார்.

இப்போது கோலி 857 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். டி வில்லியர்ஸ் கோலியை விட 8 புள்ளிகள் மட்டுமே பின்தங்கி 849 புள்ளிகளில் உள்ளார்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணி மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக நவம்பர் 21-ம் தேதி முதல் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது.

அதேபோல தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 24-ம் தேதி தொடங்குகிறது.

இத்தொடரில் டி வில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி ரன் குவித்தால் கோலியை எளிதாக பின்தள்ளிவிடுவார். அதே நேரத்தில் கோலி இப்போது தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால், மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டிகளிலும் ரன்களைக் குவித்து தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நவம்பர் தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லாவிடம் இருந்து கோலி முதலிடத்தைத் தட்டிப் பறித்தார். சர்வதேச ஒருநாள் தரவரிசையில் அவர் முதலிடம் பெற்றிருப்பது இப்போதுதான் முதல்முறை.

டி வில்லியர்ஸ் ஜூன் 2013ல் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார்.

சர்வதேச ஒருநாள் தரவரிசையில் இந்திய கேப்டன் தோனி 6-வது இடத்தில் உள்ளார். தொடக்க வீரர் சிகர் தவண் 11-வது இடத்திலும், ரோஹித் சர்மா 15-வது இடத்திலும், ரெய்னா 17-வது இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் முதலிடத்தில் உள்ளார்.

மேற்கிந்தியத்தீவுகளின் சுநீல் நரேன், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முறையே 2,3-வது இடத்தில் உள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வின் 17-வது இடத்தையும், புவனேஸ்வர் குமார் 18-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in