Published : 11 Mar 2017 10:16 AM
Last Updated : 11 Mar 2017 10:16 AM

கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி தொடரை 3-0 என வென்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

பிரிட்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 328 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அலெக்ஸ் ஹெல்ஸ் 107 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 110 ரன்களும், ஜோ ரூட் 108 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 101 ரன்களும் விளாசினர்.

இந்த ஜோடி 2-வது விக்கெட் டுக்கு 192 ரன்கள் சேர்த்தது. பென் ஸ்டோக்ஸ் 34, ஜேசன் ராய் 17, மோர்கன் 11 ரன்கள் எடுத் தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜோசப் 4 விக்கெட்கள் கைப்பற்றி னார். 329 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 39.2 ஓவர்களில் 142 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

16.3 ஓவர்களில் 45 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த அந்த அணியால் அதன் பின்னர் சரிவில் இருந்து மீளமுடியாமல் போனது. அதிகபட்சமாக கார்ட்டர் 46, ஜோசப் 22 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் பிளங்கெட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் மேற் கிந்தியத் தீவுகள் அணி தோல்வி யடைவது இது முதன்முறை. மேலும் அந்த அணியிடம் 26 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் ஒயிட்வாஷ் பெற்றுள்ளது மேற்கிந்தியத் தீவுகள்.

3 ஆட்டங்களிலும் தோல்வி யடைந்துள்ளதால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2019-ம் ஆண்டு நடை பெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக நுழைவதில் சிக்கல் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x