Published : 27 Jan 2014 11:25 AM
Last Updated : 27 Jan 2014 11:25 AM

கடைசிப் ஒருநாள் போட்டியிலும் கோட்டைவிட்டது இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஏற்கெனவே தொடரை வென்றுவிட்ட ஆஸ்திரேலியா 5-வது போட்டியிலும் வென்றதன் மூலம் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றதுடன் சர்வதேச ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தையும் பிடித்தது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. முதல் மூன்று போட்டிகளையும் தொடர்ந்து வென்ற ஆஸ்தி ரேலியா தொட ரைக் கைப்பற்றிய நிலையில், நான்காவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து வென்றது.

இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி அடிலெய்டில் நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்கம் சறுக்கல்

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பிஞ்ச் (7), வாட்சன் (0) சொற்ப ரன்களில் பிராடின் வேகத்துக்கு வெளியேறினர்.

கிளார்க் 8 ரன்களில் வெளி யேற, ஆஸ்திரேலியா முதன் மூன்று விக்கெட்டுகளை 43 ரன்களுக்குள் இழந்தது. மார்ஸ், ஜார்ஜ் பெய்லி ஜோடி ஓரளவு தாக்குப் பிடித்தது. மார்ஸ் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் பெய்லியுடன் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அரை சதம் கடந்த பெய்லி ஸ்டோக்ஸ் பந்து வீட்டில் பிராட்டிட் கேட்ச் கொடுத்து ஆட்ட மிழந்தார். அவர் 74 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார் இதில் 4 பவுண்டரிகள் அடங்கும். பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. பிராட் வேகத்தில் வேட் (31), ஜோர்டன் பந்துவீச்சில் பால்க்னர் (27), கவுல்டர் (15) ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது.

தலா ஒரு ரன்களுடன் மெக்கே , டோஹர்ட்டி ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணி சார்பில் பிராட், ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தடுமாறிய இங்கிலாந்து

இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே மோசமாக அமைந்தது. இயான்பெல் 14 ரன் களிலும், ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்கா மலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் குக் 39 ரன்கள் எடுத்து, கோல்டர் நீல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் 55 ரன் களில் வெளியேறினார். மார்கன் 39 ரன்களுக்கு பால்க்னர் பந்தில் அவுட்டானார்.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெறும் நிலையில் இருந்தது. கடைசி 25 பந்துகளுக்கு 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இங்கிலாந்தின் கை வசம் 4 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால், 46 ஓவர் 5-வது பந்தில் பிரெஸ்னன் மாக்ஸ்வெல்லின் துல்லிய துரோவில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த பிராட் (7) வெளியேற இங்கிலாந்து தடுமாறியது. மெக்கே பந்து வீச்சை அடித்து ஆட முற்பட்ட போபராவை மேத்யூ வேட் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார். போபராவின் ஆட்டமிழப்பு (25) இங்கிலாந்தின் வெற்றியைப் பறித்தது.

கடைசி ஓவரில், 6 பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டன. நான்காவது பந்தில் டிரட் வெல் (0) அவுட்டாக, இங்கிலாந்து அணி 49.4 ஓவரில், 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி தொடரை 4–1 என வென்றது. ஆட்ட நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் பால்க்னர் தட்டிச் சென்றார். தொடர் நாயகன் விருது ஆரோன் பிஞ்ச்க்கு வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x