கோபா அமெரிக்கா கால்பந்து அரையிறுதியில் அர்ஜென்டினா- அமெரிக்கா இன்று மோதல்

கோபா அமெரிக்கா கால்பந்து அரையிறுதியில் அர்ஜென்டினா- அமெரிக்கா இன்று மோதல்
Updated on
2 min read

கோபா அமெரிக்கா கால்பந்தில் ஹூஸ்டன் நகரில் இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா - அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

45-வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் அமெரிக்கா, சிலி, அர்ஜென் டினா, கொலம்பியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

அமெரிக்கா

இந்நிலையில் ஹூஸ்டன் நகரில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா - அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. 21 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதியில் நுழைந்துள்ள அமெரிக்கா இந்த தொடரில் 7 கோல்கள் அடித் துள்ளது. அந்த அணி ஜோன்ஸ், அல்ஜாண்ட்ரோ பெடோயா, பாபி வுட், கிளின்ட் டெம்ப்சே ஆகியோரை நம்பி உள்ளது. இதில் டெம்ப்சே இந்த தொடரில் 3 கோல்கள் அடித்துள்ளார். லீக் ஆட்டங்களில் அணியின் வெற்றிக்கு அவர் உறுதுணையாக இருந்தார்.

கிளின்ஸ்மான்

அரையிறுதி ஆட்டம் தொடர்பாக அமெரிக்க அணியின் பயிற்சியாளர் கிளின்ஸ்மான் கூறும்போது, “கோபா அமெரிக்கா கால்பந்து தொடரை நாங்கள் வெல்ல முடியாததற்கு எந்த காரணமும் இல்லை. கடந்த சில வருடங்களில் நாங்கள் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்துள்ளோம்.

ஐரோப்பிய நாடுகளில் நட்பு ரீதியிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றியுடன் திரும்பி உள்ளோம். அர்ஜென்டினா பெரிய அணி என்று நாங்கள் பேச வேண்டிய அவசியம் இல்லை. இரு வருடங்களுக்கு முன்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமை யிலான போர்ச்சுகல் அணியை வெளி யேற்ற நாங்கள் காரணமாக இருந்தோம்.

அந்த தொடரில் போர்ச்சுக்கல், கானா அணிகளை நாங்கள் பின்னுக்கு தள்ளியிருந்தோம். நாக் அவுட் போட்டியில் எதுவும் சாத்தியமாகும். கனவு பெரியதாக ஏன் இருக்கக்கூடாது. இன்னும் இரு ஆட்டங்கள் தான்’’ என்றார்.

அர்ஜென்டினா

அர்ஜென்டினா அணி 23 ஆண்டு களுக்கு பிறகு கோப்பையை வெல்லும் கனவுடன் இந்த தொடரில் அதிக கவனம் செலுத்தி விளையாடி வருகிறது. அர்ஜென்டினா இந்த தொடரில் 14 கோல்கள் அடித்துள்ளது.

அந்த அணியின் பலமே நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி தான். இந்த தொடரில் 4 கோல்கள் அடித்துள்ள அவர் சர்வதேச போட்டிகளில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்திருந்த கேப்ரியல் படிஸ்டுடாவின் சாதனையும் சமன் செய்திருந்தார்.

இன்றைய ஆட்டத்தில் மெஸ்ஸி மேலும் ஒரு கோல் அடிக்கும் பட்சத்தில் கேப்ரியல் படிஸ்டுடாவின் 54 கோல்கள் சாதனையை முறியடிக்கக்கூடும். அர்ஜென்டினா அணியில் செர்ஜியோ அகுரா, கோன்சாலா, ஏஞ்சல் டி மரியா ஆகியோரும் நட்சத்திர வீரர்களாக உள்ளனர்.

அரையிறுதி ஆட்டம் தொடர்பாக மெஸ்ஸி கூறும்போது, “நாங்கள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் அமெரிக்க ரசிகர்கள் மத்தியில் விளையாடுவது வித்தியாசமானது. அமெரிக்க அணி உடல் உறுதியில் வலிமை யானது.

அவர்களை விளையாட அனுமதித் தால் அதிக சேதத்தை ஏற்படுத்துவார்கள். எனது நாட்டுக்காக நான் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தெளிவாக உள்ளேன். அதற்காக என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயம் செய்வேன்’’ என்றார்.

நேரம்: காலை 6.30

ஒளிபரப்பு: சோனி இஎஸ்பிஎன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in