

ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவருக்கான 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய அணி வெள்ளி வென்றது.
இந்திய அணி வீரர்கள் பெம்பா தமங், குர்ப்ரீத் சிங், விஜயகுமார் வெள்ளிப்பதக்கம் வென்றனர். இப்போட்டியில், சீன அணி தங்கம் வென்றது, தென் கொரிய அணி வெண்கலம் வென்றது.
விஜயகுமார், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
17-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வருகிறது.