Published : 03 Sep 2014 05:49 PM
Last Updated : 03 Sep 2014 05:49 PM

பேட்ஸ்மென் ஷேஜாத், தில்ஷானிடம் இஸ்லாம் பற்றி கூறியது என்ன?- பாக். விசாரணை

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது பாகிஸ்தான் வீரர் ஷேஜாத் இலங்கை வீரர் தில்ஷானிடம் இஸ்லாம் மதம் பற்றி கூறியது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் அகமட் ஷேஜாத் இலங்கை வீரர் திலகரத்னே தில்ஷானிடன் இஸ்லாமிய மதம் பற்றிக் கூறியது என்ன என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரித்து வருகிறது.

இது குறித்து செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள விவரம் வருமாறு:

கடந்த சனிக்கிழமை நடந்த ஒருநாள் போட்டி முடிந்தவுடன் பெவிலியன் நோக்கி இரு அணி வீரர்களும் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது பாகிஸ்தான் தொடக்க வீரர் அகமட் ஷேஜாத், இலங்கை வீரர் தில்ஷானிடம் இஸ்லாம் பற்றிக் கூறியது கேமராவில் பதிவாகியுள்ளது.

ஷேஜாத் கூறியது இதுதான் என்கிறது அந்த பதிவு: “முஸ்லிம் அல்லாத நீங்கள், முஸ்லிமாக மாறிவிட்டால், வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, நேராக சொர்க்கம்தான்” என்று கூறியதாகத் தெரிகிறது. இதற்கு தில்ஷான் என்ன பதில் கூறினார் என்பது சரியாகக் கேட்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷேஜாத் எதற்காக இதனைக் கூறினார் என்று அவரிடம் கேட்டபோது, நானும் தில்ஷானும் பெர்சனலாகப் பேசிக்கொண்டோம் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் விசாரணை செய்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x