

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற நிலையில் அடுத்து நடைபெற உள்ள இந்திய டெஸ்ட் தொடர் அவ்வளவு எளிதாக இருக்காது என தனது சக அணி வீரர்களை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் எச்சரித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடு வதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.
இதுதொடர்பாக ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது: துணைக்கண்டங் களில் நிலவும் சூழ்நிலைக்கு தகுந்த படி வீரர்கள் தங்களை விரைவாக தகவமைத்துக்கொள்ள வேண் டும். அங்கு நிலவும் சூழ்நிலைகள் கடினமானதே.
இந்திய ஆடுகளங்கள் ஆஸ் திரேலியாவில் விளையாடுவது போன்று இருக்காது. முற்றிலும் மாறுபட்ட கடினமான சூழ் நிலையிலேயே விளையாட வேண்டியதிருக்கும். வீரர்கள் சூழ்நிலைக்கு ஏற்றபடி தங்களை தயார் செய்துகொண்டு வெற்றி பெறுவதற்கான வழிகளை தேடவேண்டும்.
இளம் பேட்ஸ்மேன்களான மேத்யூவ் ரென்ஷா, பீட்டர் ஹென்ட்ஸ்கோம்ப் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டனர். புதிய வீரர்களை கொண்ட குழு இந்திய தொடரில் உதவியாக இருக்கக்கூடும்.
ஆனால் அதேவேளையில் அவர்களுக்கு அங்கு விளை யாடிய அனுபவம் இல்லாதால் இந்த தொடர் கடினமாகவே இருக்கும். சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவதற்காக நாங்கள் இந்தியா செல்கிறோம். இந்த தொடர் இளம் வீரர்களுக்கு சவாலாக அமையும் மற்றும் சிறந்த பாடங்களை கற்றுக்கொள்ளும் வகையிலும் இருக்கும்.
இவ்வாறு ஸ்டீவ் ஸ்மித் கூறினார்.