தகுதி சுற்றில் பாம்ப்ரி அசத்தல்

தகுதி சுற்றில் பாம்ப்ரி அசத்தல்
Updated on
1 min read

ஆஸ்திரேலிய ஓபன் தகுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

தரவரிசையில் 534-வது இடத்தில் உள்ள இந்தியாவின் யூகி பாம்ப்ரி தனது முதல் சுற்றில், அமெரிக்காவின் ஸ்டீபன் கோஸ்லோவை 1-6, 4-6 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார். மற்றொரு இந்திய வீரரான சாகேத் மைனேனி 0-6, 2-6 என்ற நேர் செட்டில் தரவரிசையில் 189-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் பீட்டர் கோஜோவ்ஸ்கியிடம் தோல்வியடைந்தார்.

பாம்ப்ரி தனது 2-வது ஆட்டத்தில் செர்பியாவின் பெட்ஜா கிறிஸ்டினை எதிர்த்து விளையாடுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in