Published : 01 Sep 2014 11:20 AM
Last Updated : 01 Sep 2014 11:20 AM

இலங்கையை சந்திக்கிறது இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தனது முதல் ஆட்டத்தில் இலங்கையையும், மகளிர் அணி தனது முதல் ஆட்டத்தில் தாய்லாந்தையும் சந்திக்கின்றன.

பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய ஆடவர் அணி, செப்.21-ல் இலங்கையையும், செப். 23-ல் ஓமனையும், செப்.25-ல் பாகிஸ்தானையும், செப்.27-ல் சீனாவையும் சந்திக்கிறது.

இந்திய மகளிர் அணி தனது முதல் ஆட்டத்தில் செப்.22-ல் தாய்லாந்தையும், செப்.24-ல் சீனாவையும், செப்.26ல் மலேசியாவையும் சந்திக்கிறது. 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி வரும் 19-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை தென் கொரியாவின் இன்சியோனில் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x