Published : 24 Sep 2018 06:16 PM
Last Updated : 24 Sep 2018 06:16 PM

ரஷீத் கான் விளையாட முடியாத பவுலரெல்லாம் ஒன்றுமில்லை: வெற்றிக்குப் பிறகு மஹ்முதுல்லா பேச்சு

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று 87/5 என்ற நிலையிலிருந்து வங்கதேச வீரர்கள் மஹ்முதுல்லா, இம்ருல் கயேஸ் 128 ரன்கள் கூட்டணி அமைத்தது வெற்றிக்கு இட்டுச் சென்றது.

இந்த கூட்டணியில் இவர்கள் செய்த மிகப்பெரிய காரியம் என்னவெனில் ரஷீத் கானின் ஓவரில் விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் ஆடியதுதான்.

ரஷீத்தின் கடைசி 3 ஓவர்களில் அவரை அடித்து ஆடினர். மஹ்முதுல்லா மிட்விக்கெட் மேல் 2 சிக்சர்களை ரஷீத் கானை அடித்தார், கடைசி ஓவரில் இம்ருல் கயேஸ் ரிவர்ஸ் ஸ்வீப்பில் நான்கு ரன் அடித்தார்.

3 ரன் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் மஹ்முதுல்லா கூறும்போது, “ரஷீத் கான் தனிச்சிறப்பான பவுலர்தான், ஆனால் ஆடமுடியாத பவுலரெல்லாம் இல்லை. முந்தைய போட்டியில் அவருக்கு எதிராக கவனக்குறைவுடன் ஆடினேன்.

ஆனால் இந்தப் போட்டியில் ரஷீத் கானுக்கு விக்கெட்டை கொடுக்கக் கூடாது என்று நானும் இம்ருலும் முதலிலேயே முடிவெடுத்து விட்டோம்.

கடைசி வரை நிற்பது என்று முடிவுகட்டினோம். இலக்கை எட்டினோம். சிந்திக்க நேரமில்லை. 4 நாட்களில் 3 போட்டிகளில் ஆடியுள்ளோம். நான் அவரை விளையாடிய போது வெறுமையான மனநிலையில் எதிர்கொண்டேன்.

ரஷீத்துக்கு எதிராக இடது கை வீரரை களத்தில் முன்னிறுத்துவது என்பது எங்களது திட்டம், இம்ருல் கயேஸ் ஒத்துழைத்தார், அவர் ஊரிலிருந்து வந்து இப்படியொரு ஆட்டத்தை ஆடினார் நேற்று. அதுவும் இந்த் உஷ்ணத்தில்...மேலும் அவர் தொடக்க வீரர், 6ம் நிலையில் இறங்கி இப்படியொரு ஆட்டம் உண்மையில் தனிச்சிறப்பானது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x