Last Updated : 25 Sep, 2018 12:56 PM

 

Published : 25 Sep 2018 12:56 PM
Last Updated : 25 Sep 2018 12:56 PM

பிபா 2018-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக ‘குரோஷியாவின் லூகா மாட்ரிச்’ தேர்வு

2018-ம் ஆண்டுக்கான பிபாவிந் சிறந்த கால்பந்து வீரராக குரோஷியாவின் லூகா மாட்ரித் சேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. பிரேசில் வீராங்கனை மார்டா 6-வது முறையாகச் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் உலகக் கால்பந்து சம்மேளனம் சர்வதேச அளவில் சிறந்த கால்பந்து வீரர்களைத் தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சிறந்த வீரர்களுக்கான தேர்வில் குரோஷிய வீரர் லூகா மாட்ரிச், போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயனோனல் மெஸ்ஸி, முகமது சலா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இந்த போட்டியின் முடிவில், ரியல் மேட்ரிட் அணிக்காக விளையாடி வருபவரும், குரோஷிய அணியின் கேப்டனுமான லூகா மாட்ரிச் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். லண்டனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிபா சார்பில் அந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

ரியல்மாட்ரிட் அணி இந்த முறை சாம்பியன் லீக்கில் 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது அந்த அணியிலும் இடம் பெற்றிருந்த லூகா மாட்ரிச், உலகக்கோப்பைப் போட்டியிலும் குரோஷிய அணியை இறுதிப்போட்டி வரை முதல்முறையாக அழைத்துச் சென்றார். இந்தச் சாதனைக்காக லூகாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து பிபாவின் விருதுகளை லயோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இருவர் மட்டுமே மாற்றி தலா 5 முறை விருதுகளை வென்று வந்தநிலையில், முதல் முறையாக லூகா மாட்ரிச் பெற்றுள்ளார்.

கால்பந்து விளையாட்டில் மிகச்சிறந்த வீரரான லயோனல் மெஸ்ஸி இந்த முறை சிறந்த வீரர்களுக்கான தேர்வுப்பட்டியலில் முதல் 3 இடங்களில் கூட இடம் பெறவில்லை. 2-வது இடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், 3-வது இடத்தில்முகம்மது சலாவும் இடம் பெற்றனர்.

இந்த விருது குறித்து மோட்ரிச் கூறுகையில், ‘‘இந்தச் சிறப்பான மேடையில் இருந்து இந்த விருதினைப் பெறுவது பெருமையாக இருக்கிறது. இந்த விருது எனக்கானது அல்ல ரியல்மாட்ரிட், குரோஷிய அணி, எனது பயிற்சியாளர்கள் அனைவருக்குமானது’’ எனத் தெரிவித்தார்.

மகளிர்பிரிவில் பிரேசில் வீராங்கனை மார்டா சிறந்த வீராங்கனைக்கான விருதைப் பெற்றார்.இந்த சீசனில் 32 கோல்கள்வரை அடித்த முகமது சலா அதிகமான கோல்கள் அடித்த வீரருக்கான புகாஸ் விருதைப் பெற்றார்.

சிறந்த கோல்கீப்பருக்கான கோல்டன் குளோவ் விருதை பெல்ஜியம் நாட்டு கோல்கீப்பர் திபாட் கோர்டியஸ் பெற்றார். பேர்ப்ளே வீரருக்கான விருதை ஜெர்மனி அணியின் பார்வேர்டு வீரர் லென்னார்ட் பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x