Last Updated : 28 Sep, 2018 06:08 PM

 

Published : 28 Sep 2018 06:08 PM
Last Updated : 28 Sep 2018 06:08 PM

துபாயில் அடுத்து டி10 போட்டி: 64 டாப் கிரிக்கெட் வீரர்களுடன் 10 அணிகள் பங்கேற்பு

 

கிறிஸ் கெயில், ஜாகீர் கான், லசித் மலிங்கா, மோர்ன் மோர்கல், ரஷித் கான் உள்ளிட்ட 64 சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் டி10 கிரிக்கெட் போட்டி துபாயில் நவம்பர் 23 முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு தொடரில் 6 அணிகள் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு 8 அணிகள் பங்கேற்கின்றன, இந்தப் போட்டிகள் அனைத்தும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடக்கின்றன.

சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) அங்கீகாரத்துடன் நடத்தப்படும்  டி20 போட்டிகள் பல்வேறு நாடுகளில் பிரபலம் அடைந்துவரும் நிலையில், துபாயில் டி10 போட்டிகள் 2-வது ஆண்டாக நடத்தப்பட உள்ளன.

இந்த போட்டியில் இந்திய வீரர்கள் ஜாகீர்கான், முகமது ஷமி ஆகியோரைத் தவிர வேறு எவரும் இடம் பெறவில்லை . இந்திய கிரிக்கெட் கிரிக்கெட் வாரியம் வீரர்களை விளையாட அனுமதிக்கவில்லையா அல்லது டி10 போட்டிகளுக்குஆதரவு அளிக்கக்கூடாது என்று முடிவு செய்துவிட்டதா எனத் தெரியவில்லை.

திறமை உள்ள இந்திய வீரர்கள் வாய்ப்புக்காக இந்திய அணியை எதிர்நோக்கி இருக்கும் போது, இதுபோன்று ஐசிசி ஆதரவுடன் நடத்தப்படும் பல்வேறு லீக் போட்டிகளில் விளையாட பிசிசிஐ அனுமதிக்க வேண்டும். வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க சிவப்பு கம்பளம் விரிக்கும் பிசிசிஐ , இந்திய வீரர்கள் மட்டும் வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாடத் தொடர்ந்து பாரா முகமாக இருந்து வருகிறது.

கடந்த ஆண்டு கேரளா கிங்ஸ், பஞ்சாப் லெஜன்ட்ஸ், மராத்தா அரேபியன்ஸ், பெங்கால் டைகர்ஸ், தி கராச்சியன்ஸ், ராஜ்புத்ஸ், நார்தன் வாரியர்ஸ், பக்தூன்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த ஆண்டு புதிதாக தி கராச்சியன்ஸ், நார்த்தன் வாரியர்ஸ் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற கேரள கிங்ஸ் அணியில் இந்த ஆண்டு கெயில், ஜுனைத் கான், சந்தீப் லாமிச்சானே, டாம் கரன், பேபியன் ஆலன், நிரோஷன் டிக்வெலா, பென்னி ஹோவல், இம்ரான் நசீர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

பஞ்சாப் லெஜன்ட்ஸ் அணியில் ஜோர்டன், லியாம் பிளங்கெட், லூக் ரோஞ்சி, முகமமது ஷமி, ஜாகீர் கான், உமர் அக்மல், மெக்லனஹன், டாம் மூர்ஸ், அன்வர் அலி, ஜேட் டெர்ன்பாச், ஹசன் கான் ஆகியோர் உள்ளனர்.

பெங்கால் டைகர்ஸ் அணியில் மோர்கல், அமீர் யாமிந், முகம்மது நபி, குஷால் பெரேரா, ஷெர்பேன் ரூதர்போர்டு, கெவின் கூப்பர், டான் கிறிஸ்டியன், அலிகான், ரியாத் எம்ரிட், ஜேஸன் ராய், சாம் பில்லிங்ஸ், ஆசிப் அலி ஆகியோர் உள்ளனர்.

மராத்தா அரேபியன்ஸ் அணியில் ஆப்கான் வீரர் ராஷித்கான், அலெக்ஸ் ஹேல்ஸ், கம்ரான் அக்மல்,ஜேம்ஸ் பாக்னர், லசித் மலிங்கா, ஜேம்ஸ் வின்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், பிரென்டன் டெய்லர், ஆடம் லித், வேன் டெர் மெர்வ், நஜ்புல்லாஜத்ரன், ரிச்சார்ட் கிளீசன் ஆகியோர் உள்ளனர்.

பக்தூன் அணியில் லியாம் டாஸன், முகம்மது இர்பான், டேவிட் வில்லி, கோலின் முன்ரோ, ஆன்ட்ரூ பிளட்சர், சோஹைல் கான், சர்புதீன் ஆஷ்ரப், வால்டன், ஷாபூர் ஜத்ரன், கேமரூன் டெல்போர்ட், குல்பாதின் நயிப் இடம் பெற்றுள்ளனர்.

ராஜ்புத் அணியில் முகமது ஹபிஸ், ரிலி ரோஸ்ஸா, முகமது ஷேசாத், மில்ஸ், பிராத்வெய்ட், ராஹத் அலி, சமித் படேல், குவாஸ் அகமது, பென் டங்ஸ், பீட்டர் ட்ரீகோ, ஷான் மசூத் உள்ளனர்.

கராச்சி அணயிலி் ஜோப்ரா ஆர்ச்சர், திசாரா பெரேரா, பென் கட்டிங், முகமது நவாஸ், டேவிட் மலான், பவாத் அகமது, இசுரு உதானா, ஜோ கிளார்க், சமிமுல்லா ஷென்வாரி, முகம்மது இர்பான் ஆகியோர் உள்ளனர்.

நார்த்தன் வாரியர்ஸ் அணியில் ரவி போபரா, ரோமன் பாவெல், ஹாரி குமே, கிறிஸ் கிரீன், மெக்கோய், லென்டில் சிம்மன்ஸ், காரே பியாரே, கென்னார் லிவிஸ், டிவைன் ஸ்மித், நிகோலஸ் பூரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x