

டோக்கியோ ஓபன் (டோரே பசிபிக் ஓபன்) டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
ஜப்பான் தலைநகர் டோக்கி யோவில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சானியா-காரா ஜோடி 6-2, 7-5 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் கார்பைன்-கார்லா சுரேஜ் ஜோடியை தோற்கடித்தது. தொடர்ந்து இரண்டாவது முறை யாக டோக்கியோ ஓபனில் வாகை சூடியிருக்கிறது சானியா ஜோடி.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற சானியா, இப்போது அடுத்த வெற்றியை ருசித்துள்ளார். சானியா அடுத்ததாக ஆசிய விளை யாட்டுப் போட்டியில் பங்கேற் கிறார். அதில் பயஸ், போபண்ணா, சோம்தேவ் போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கவில்லை. அதனால் கலப்பு இரட்டையர் பிரிவில் திவிஜ் சரண் அல்லது சாஹேக் மைனேனியுடன் இணைந்து சானியா களமிறங் குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.