Last Updated : 06 Sep, 2018 09:21 AM

 

Published : 06 Sep 2018 09:21 AM
Last Updated : 06 Sep 2018 09:21 AM

மோசடி செய்தாவது வெற்றி பெறுவதே குறிக்கோள்: ஆஸி.பண்பாடு மாற வருகிறது டிம் பெய்ன், லாங்கரின் கெடுபிடி விதிகள்

பால்-டேம்பரிங் விவகாரத்தில் ஆஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பேங்க்ராப்ட் தடையை எதிர்கொண்டுள்ள நிலையிலும் அணிக்கு கடும் கெட்ட பெயர் உருவான நிலையிலும் இனி ஒரு போதும் மோசடி செய்தாவது வெற்றி பெறுவதே குறிக்கோள் என்ற பண்பாடு மாற நடத்தை விதிமுறைகளை வகுத்துள்ளது ஆஸி.கிரிக்கெட் வாரியம்.

ஆட்டத்தின் நிலை குறித்த இரண்டு பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் பண்பாடு, மற்றும் அணிக்குள் வீரர்களின் நடத்தை என்று இரண்டு விதமான விதிமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சிட்னி மார்னிங் ஹெராட்ல்டு பத்திரிகைக்கு பேட்டி அளித்த டிம் பெய்ன், தானும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரும் இது குறித்து விதிமுறைகளை வடிவமைத்து வருவதாகவும் எனவே பால் டேம்பரிங், வரம்பு மீறிய ஸ்லெட்ஜிங் ஆகியவை இனி நடக்கக் கூடாது என்பதையும் உறுதி செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

யு.ஏ.இ.யில் பாகிஸ்தானுக்கு எதிராக வரவிருக்கும் டெஸ்ட் தொடர் முதலே இவை சீராகக் கண்காணீக்கப்படும் என்று டிம் பெய்ன் தெரிவித்தார்.

எங்கள் அணியை மற்றவர்கள் எப்படி பார்க்க வேண்டு என்பதற்கான வரைவு மாதிரியை வடிவமைத்துள்ளோம்

இது மிக மிக முக்கியம், நாட்டை பிரதிநிதித்துவம் செய்வது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம், பேகி கிரீன் தொப்பியை அணிவது எங்களுக்குப் பெருமை.

நாங்கள் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியன் கிரிக்கெட் அணியல்ல என்ற பண்பாட்டுக்குத் திரும்பச் செல்ல வேண்டும். அதாவது கிரிக்கெட் அணி எங்களுக்குச் சொந்தமானதல்ல, அது ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமானது, ஆஸ்திரேலிய மக்களுக்குச் சொந்தமானது

இதில் சவாரி செய்யவே எங்களுக்கு பணிக்கப்பட்டிருக்கிறது. கிரிக்கெட் ஆஸ்த்ரேலியாவின் நடத்தை விதிமுறைகளிலிருந்தும் இது வேறு பட்டது, இது அணிக்குள் வீரர்களின் பண்பாடு பற்றியது, வீரர்கள் தங்கள் அணுகுமுறைக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும்.

கிரிக்கெட் வீரர்கல் “மக்களாக” மேம்பாடு அடைய வெண்டும், களத்தில் நடந்து கொள்வதுதான் நம் இமேஜைப் பாதுகாப்பதாகும்.

நல்ல கிரிக்கெட் வீரர்களாக இருப்பதோடு, நல்ல மக்களாகவும் இருக்க வேண்டும் என்பதே முக்கியம்

இதை உருவாக்கி விட்டால் இப்படிப்பட்ட பண்பாட்டில்தான் மக்கள் அணியுடன் ஈடுபடுவார்கள், இந்தப் பண்பாடுதான் பரவ வேண்டும், விரைவில் பரவ வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x