Published : 01 Sep 2018 09:45 AM
Last Updated : 01 Sep 2018 09:45 AM

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி; பெடரர், ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸில் 2-ம் நிலை வீராங்கனையான டென் மார்க்கின் கரோலின் வோஸ்னி யாக்கி 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 7-5, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் பிரான்ஸின் பெனோ யிட் பேரை வீழ்த்தினார். 6-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 6-1, 6-3, 6-7 (2-7), 6-2 என்ற கணக் கில் அமெரிக்காவின் டெனிஸ் சாண்ட்கிரெனை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

4-ம் நிலை வீரரான ஜெர்மனி யின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 6-4, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் நிக்கோலஸ் மஹூட்டை யும், 7-ம் நிலை வீரரான குரோஷியா வின் மரின் சிலிச் 6-2, 6-0, 6-0 என்ற நேர் செட்டில் போலந்தின் ஹூபர்ட் ஹர்காஸையும், 10-ம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவின் கோபின் 6-2, 6-7 (1-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் ராபின் ஹாஸையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, 36-ம் நிலை வீராங் கனையான உக்ரைனின் லெசியா சுரேன்கோவை எதிர்த்து விளையாடினார். இதில் வோஸ்னி யாக்கி 4-6, 2-6 என்ற நேர் செட்டில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 4-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனி யின் ஏஞ்சலிக் கெர்பர் 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் சுவீடனின் ஜோகன்னா லார்சனையும், 5-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா விட்டோவா 7-5, 6-3 என்ற நேர் செட்டில் சீனாவின் வாங் யபானையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

6-ம் நிலை வீராங்கனையான பிரான்ஸின் கரோலின் கார்சியா 6-2, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் புயிர்டோ ரிகோவின் மோனிகா புயிக்கையும், 22-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா 6-2, 7-5 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் சொர்னா கிறிஸ்டியையும், 10-ம் நிலை வீராங்கனையான லத்வியாவின் ஜெலீான ஓஸ்டபென்கோ 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்டையும், 14-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த பெர்னார்டா பெராவையும் வீழ்த்தி 3-வது சுற்றில் கால்பதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x