

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அந் நாட்டை சேர்ந்த முன்னாள் வீரர் மார்வன் அட்டபட்டு நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 15 ஆண்டு களில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் முழுநேர பயிற்சியாளராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
இலங்கை கிரிக்கெட் வாரியத் தின் பயிற்சியாளர் தேர்வுக்குழு, அட்டபட்டு உள்ளிட்ட இரு வரிடம் நேற்று முன்தினம் நேர் காணல் நடத்தியது. அதைத் தொடர்ந்து பயிற்சியாளர் பதவிக்கு அட்டபட்டுவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதை யடுத்து அவரை தலைமைப் பயிற்சி யாளராக நியமிப்பதற்கு செயற்குழு ஒருமனதாக ஒப்புதல் வழங்கியது என இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.