

அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டி 2018-ல் இந்தோனேசியாவில் நடைபெறும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
2018-ஆம் ஆண்டிற்கான ஆசிய விளையாட்டுப் போட்டி வியட்னாமில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அங்கு நிலவும் நிதி நெருக்கடி காரணமாக அந்த திட்டத்தை கைவிடுவதாக அந்த நாடு அறிவித்தது.
இந்த நிலையில் அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டி தங்கள் நாட்டில் நடத்தப்படும் என்று இந்தோனேசிய ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் ரித்து சுபோவோ தெரிவித்தார்.