Published : 11 Sep 2018 09:44 AM
Last Updated : 11 Sep 2018 09:44 AM

ஆஸ்திரேலியாவின் புதிய டெஸ்ட் அணி எப்படியிருக்கும்?

பால்டேம்பரிங் விவகாரத்துக்குப் பிறகே ஆஸ்திரேலிய அணியில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன, புதிய பண்பாட்டை நோக்கி ஆஸ்திரேலிய அணி நடைபோடத் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் அதற்கேற்ப அணி வீரர்களையும் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வார்னர், ஸ்மித், பேங்கிராப்ட் தடைகளால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் கடும் பின்னடைவு கண்டுள்ளது. தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான யு.ஏ.இ. தொடருக்கான அணியில் காயம் காரணமாக ஜோஷ் ஹேசில்வுட், பாட் கமின்ஸ் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

டெனிஸ் லில்லி, கிரெக் சாப்பல், விக்கெட் கீப்பர் ராட்னி மார்ஷ் ஓய்வு பெற்ற நிலையில் 1985ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி ஆலன் பார்டர் தலைமையில் கடுமையாக திணறியது. நடுவர் உதவியுடன் தான் தொடரை இழக்காமல் தப்பியது.

ஆனால் இப்போது டிவி அம்பயர், தொலைக்காட்சி, தொழில் நுட்ப காலத்தில் மோசடிகளும் செய்ய முடியாத நிலையில் ஆஸ்திரேலிய அணி கடும் சிக்கலில் உள்ளது.

இதனால் பழைய பவுலர் பீட்டர் சிடிலை மீண்டும் அழைக்கவும், ஒருநாள், டி20 ஸ்பெஷலிஸ்ட் ஆன ஏரோன் பிஞ்ச்சை டெஸ்ட் அணியிலும் தேர்வு செய்ய முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஜை ரிச்சர்ட்ஸன், கிறிஸ் ட்ரிமெய்ன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது. ஸ்பின்னில் நேதன் லயன், ஜோன் ஹாலண்ட் இடம்பெறுவார்கள். இடது கை சுழல் ஆஷ்டன் ஆகாருக்கும் வாய்ப்பு காத்திருக்கிறது.

டிம் பெய்ன் தலைமையில் நியூ லுக் ஆஸ்திரேலிய அணி இவ்வாறு இருக்கலாம்:

டிம் பெய்ன், ஏரோன் பிஞ்ச், மேட் ரென்ஷா, உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க், கிறிஸ் ட்ரிமெய்ன், ஜோன் ஹாலண்ட், நேதன் லயன், ஜை ரிச்சர்ட்சன், ஆஷ்டன் ஆகர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x