

போலந்து குத்துச்சண்டை போட்டி யில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார்.
போல்ந்து நாட்டில் உள்ள கிளிவிஸ் நகரில் மகளிருக்கான 13-வது சில்சியன் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் 48 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கிய இந்தியாவின் மேரி கோம் இறுதி சுற்றில் 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அகிரிம் கஸனாயேவாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இந்த ஆண்டில் மேரி கோம் வெல்லும் 3-வது தங்கப் பதக்கம் இதுவாகும். இதற்கு முன்னர் இந்திய ஓபன், காமன் வெல்த் விளையாட்டிலும் அவர், தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 54 கிலோ எடைப் பிரிவில் இந்தியா வின் மனிஷா வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர், 2-3 என்ற கணக்கில் உக்ரைனின் இவன்னா குருப்பீனியாவிடம் தோல்வியடைந்தார்.
துருக்கி போட்டி
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற அஹ்மத் கோமெர்ட் குத்துச்சண்டை தொட ரில் மகளிருக்கான 64 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் இறுதி சுற்றில் துருக்கியின் சீமா கலிஸ்கானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென் றார். இதேபோல் 48 கிலோ எடைப் பிரிவு இறுதி போட்டியில் இந்தியா வின் மோனிகா, துருக்கியின் அயீஸ் காகரேரையும் 81 கிலோ எடைப் பிரிவில் பாக்யபதி கச்சாரி, துருக்கியின் செல்மா கரகோயுனையும் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றனர்.
51 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பிங்கி ஜங்கரா வெள்ளிப் பதக்கம் பெற்றார்.