Published : 12 Sep 2018 12:45 PM
Last Updated : 12 Sep 2018 12:45 PM

செரீனாவை பற்றிய விமர்சன கார்ட்டூனுக்கு கடும் எதிர்ப்பு: மறுபதிவு செய்த பத்திரிகை

இனவெறி குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து செரீனாவை விமர்சித்து வரைந்த கார்ட்டூனை ஆஸ்திரேலிய பத்திரிகை மறுபதிவு செய்துள்ளது.

கடந்த வாரம் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசகாவும், முன்னாள் சாம்பியன் செரீனா வில்லியம்ஸும் மோதினார்கள். இதில் செரீனா தோல்வி அடைந்தார்.

இதில் ஆட்டத்துக்கு இடையே 2-வது செட்டில் செரீனாவின் பயிற்சியாளர் அவரிடம் சைகையில் ஏதோ தெரிவிக்க, ஆட்டத்தின் நடுவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செரீனாவை கண்டித்தார்.

ஆனால் செரீனா தான் எந்தவிதமான தவறும் செய்யவில்லை என்றும் பயிற்சியாளர் தனக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை என்று கடுமையாகப் பேசினார்.

இதையடுத்து நடுவரிடம் சண்டையிட்டதற்காக 12 லட்ச ரூபார் செரீனாவுக்கு அபராதமாக விதிக்கப்பட்டது.

செரீனாவின் நடவடிக்கையை விமர்சித்து ஆஸ்திரேலியாவின் ’சன்’ பத்திரிகையில் கார்ட்டூன் வெளியிடப்பட்டிருந்தது. அதில் செரீனா உருவத்தை கிண்டல் செய்து அப்படம் வரையப்பட்டிருந்தாக கூறி கார்ட்டூனை வரைந்த மார்க் நைட்டுக்கு பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.

சன் பத்திரிகையின் ஆசிரியர் டேமன் ஜான்ஸ்டன் "அந்த கார்ட்டூனில் எந்த நிறவெறியும், இனவெறியும் இல்லை. இந்த எதிர்ப்புகள் டென்னிஸ் சாதனையாளர் ஒருவரின் தவறை மறைக்கிறது" என்று  தெரிவித்துள்ளார்.

அந்த கார்ட்டூனை வரைந்த ஆசிரியர் மார்க் நைட்  கூறும்போது, "இந்த கார்ட்டூனை  வரைந்ததற்காக பலரிடமிருந்து எனக்கு கொலை  மிரட்டல்கள் வந்தன. பலர் எனது ட்விட்டர் கணக்கை ரத்து செய்ய வலியுறுத்தினார்கள்” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், இனவெறி குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அந்த கார்ட்டூனை  மறுபதிவு செய்து சன்  பத்திரிகை வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x