Published : 21 Sep 2018 12:35 PM
Last Updated : 21 Sep 2018 12:35 PM
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை பதிவிட்டு தனது ரசிகர்களை அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளார்.
கோலி பதிவிட்ட போஸ்டரில் சூப்பர் மேன் போன்ற தோற்றத்தில் விராட் கோலி இருக்கிறார். மேலும் அந்த போஸ்டரில் WRONG PRODUCTION வழங்கும் TRAILER: THE MOVIE என்று அப்படத்துக்கு தலைப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அப்படம் 28 ஆம் தேதி வெளியாகும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தை பதிவிட்டு கோலி, ”பத்து ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த அறிமுகம், காத்திருக்க முடியவில்லை” என்று பதிவிட்டிருக்கிறார்.
படம் தொடர்பான கூடுதலான எந்த தகவலையும் கோலி அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
இது திரைப்படமா? அல்லது கோலி நடித்துள்ள புதிய விளம்பரத்தை மக்களிடம் கொண்டு செலவதற்கு கையாண்டுள்ள உத்தியா என்று அவரது ரசிகர்கள் பலரும் குழப்ப அடைந்துள்ளதுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பையில் விராட் கோலி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT