Published : 09 Sep 2018 05:01 PM
Last Updated : 09 Sep 2018 05:01 PM

அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் தோல்வி; நடுவரை திருடன் என திட்டினார் செரீனா: பாலியல் பாகுபாடு காட்டுவதாகவும் குற்றச்சாட்டு

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் 20-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, 17-ம் நிலை வீராங்கனையும் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை எதிர்த்து விளையாடினார். இதில் நவோமி ஒசாகா 6-2, 6-4 என நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜப்பான் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் 20 வயதான நவோமி ஒசாகா.

இந்த ஆட்டத்தில் முதல் செட்டை செரீனா இழந்த நிலையில் 2-வது செட்டின் தொடக்கத்தின் போது, தனது பயிற்சியாளரான பேட்ரிக் மௌர டோக்லோவிடம் இருந்து அறிவுரை பெற்ற தாக கூறி, செரீனாவை கள நடுவர் கார்லஸ் ரமோஸ் எச்சரித்தார். அதற்கு அப்போதே பதிலளித்த செரீனா, ‘எனது பயிற்சியாளர் கைகளால் வெற்றி பெறு என என்னை நோக்கி ‘தம்ஸ் அப்’ மட்டுமே காட்டினார். ஏமாற்றி வெற்றி பெறுவதற்கு பதில் நான் தோற்றுவிட்டே செல்வேன்’ என்றார். ஆனால், அதை நடுவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதைத் தொடர்ந்து, இரண்டாவது செட்டில் 3-1 என முன்னிலை வகித்தபோது திடீரென ஆத்திரமடைந்த செரீனா மட்டையை ஓங்கி தரையில் அடித்து கோபத்தை வெளிப் படுத்தினார். இது மீண்டும் விதிமீறலாகி ஆட்டத் தில் செரீனாவின் புள்ளி குறைக்கப்பட்டு 3-2 என்ற நிலை உருவானது.

இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற செரீனா நடுவரை பார்த்து, ‘என்னிடம் இருந்து புள்ளியை திருடிவிட்டாய். நீ ஒரு திருடன். நீ என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று ஆவேசமாக கத்தினார். இதைத்தொடர்ந்து அவர் மைதானத்திலேயே கடினமான வார்த்தைகளை பயன்படுத்த அவரை அமெரிக்க ஓபன் டென்னிஸ் அதிகாரிகள் வந்து சமாதானப்படுத்தினர்.

நடுவருடன் வாக்குவாதம் செய்ததால் ஒரு கேமையும் செரீனா இழந்தார். இந்த சர்ச்சைகளுக்கு பிறகு இரண்டாவது செட்டை தொடர்ந்த செரீனா 6-4 என ஒசாகாவிடம் பறிகொடுத்தார். 24-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்த 36 வயதான செரீனா வில்லியம்ஸ் போட்டி முடிவடைந்ததும் நிருபர்களிடம் கூறியதாவது:

நடுவர் கார்லோஸ் ரமோஸ் என்னை ஏமாற்றுக் காரி என்றார். ஆனால் நான் ஏமாற்றவில்லை. அதேபோல களத்தில் இருந்த போது பயிற்சி யாளரிடம் ஆலோசனை பெற்றேன் என்றார். அதை யும் நான் செய்யவில்லை. அவர் என்ன பேசிக் கொண்டிருக்கிறார் என பார்த்தேன். ஏனென்றால் எங்களுக்குள் சமிக்ஞைகள் இல்லை. நாங்கள் ஒருபோதும் சமிக்ஞைகள் குறித்து ஆலோசித்தது இல்லை. நீங்கள்தான் இதை கண்டுபிடிக்க வேண்டும். சிக்கலையும் தீர்க்க வேண்டும்.

டென்னிஸில் பாலியல் பாகுபாடு உள்ளது. ஆண் போட்டியாளர்கள், பலர் நடுவர்களை கேவலமாக பேசியுள்ளார்கள். அதற்காக நடுவர்கள் அவர்களின் போட்டியில் அபராத புள்ளிகளை எடுக்க மாட் டார்கள். நான் பெண் என்பதால், இதை அவர் செய்தார். நான் பெண்களின் உரிமைக்காகவும், சம முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற் காகவும் பேசினேன். என்னிடம் இருந்து ஆட்டத்தை எடுத்துக் கொண்டதாலேயே திருடன் என்று கூறி னேன். ஆட்டத்தில் பாலியல் பாகுபாடு காட்டப்பட்டதாகவே உணர்ந்தேன்.

நான் இப்போது உண்மையை உணர்ந்துள் ளேன். இதை நான் கடந்து செல்லவேண்டும். உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வீராங்கனை களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும். அவர் கள் தங்களது உணர்ச்சிகளை தங்களுக்குள் ளேயே வெளிப்படுத்திக் கொள்ளவேண்டும். அவர்கள் பலமான வீராங்கனையாக இருக்க வேண்டும். இன்றைய நாள் காரணமாக அவர்கள் இதுபோன்ற செயல்களுக்கு அனுமதிக்கப்படலாம். இந்த போராட்டம் எனக்கு பயன் அளிக்காமல் இருக்கலாம், கண்டிப்பாக அடுத்து வரும் வீராங்கனைகளுக்கு உதவும்.

இவ்வாறு செரீனா வில்லியம்ஸ் கூறினார்.

செரீனாவின் பயிற்சியாளர் பேட்ரிக் தனது டுவிட்டர் பதிவில், ‘இப்போட்டியில் இறுதியாக நட்சத்திரமாக ஜொலித்தது நடுவர்தான். போட்டியின் முடிவை தீர்மானிக்க அவரின் தலையீடு உள்ளது என்றால், இது மீண்டும் நடக்காமல் இருக்க நாம் எப்போது முடிவெடுக்க போகிறோம்’ என குறிப்பிட் டுள்ளார்.

மன அழுத்தமா?

செரீனா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குழந்தை பெற்றெடுத்தார். இதன் பின்னர் சில மாதங்களிலேயே சர்வதேச போட்டிகளுக்கு திரும் பினார். எனினும் பேறு காலத்துக்குப் பிந்தைய உணர்வுகளால் கடுமையாக அவதியடைந்தார். இந்தப் பிரச்சினைத் தீர்க்கப்படாவிட்டால் 3 ஆண்டுகள் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும் என்று செரீனாவே கூறியிருந்தார்.

சில தோல்விகளால் கடுமையாக பாதிக்கப் பட்ட செரீனா டென்னிஸிலும் தன்னால் கவனம் செலுத்த முடியவில்லை, எனது குழந்தைக்கு நல்ல தாயாகவும் இருக்க முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்திருந்தார். அதிக மன அழுத்தத்தின் காரணமாகவே உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் தற்போது செரீனா அதீத கோப நிலைக்கு சென்றிருப்பதாக கருதப்படுகிறது.

குழந்தை பேறுக்கு பின்னர் செரீனா பிரெஞ்சு ஓபனில் 3-வது சுற்றுடன் வெளியேறினார். விம்பிள் டனில் இறுதி சுற்றில் தோல்வி கண்டார். மேலும் பல்வேறு போட்டிகளில் தன்னைவிட தரவரிசையில் மிகவும் பின்தங்கிய வீராங்கனைகளிடம் கூட செரீனா தோல்விகளை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x