Last Updated : 09 Sep, 2018 06:25 PM

 

Published : 09 Sep 2018 06:25 PM
Last Updated : 09 Sep 2018 06:25 PM

கோலியுடன் வாக்குவாதம்; நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு: ஆன்டர்ஸனுக்கு அபராதம்

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடனும், நடுவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆன்டர்ஸனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி பேட் செய்தபோது, கேப்டன் விராட் கோலிக்கும், ஆன்டர்ஸனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆன்டர்ஸன் வீசிய 29-வது ஓவரில் விராட் கோலி கால்காப்பில் வாங்கினார். அப்போது எல்பிடபிள்யு கேட்டு ஆன்டர்சன் நடுவரிடம் முறையிட்டார். ஆனால், அதற்கு நடுவர் தர்மசேனா அவுட் தரவில்லை. அந்த ஓவர் முடிந்து நடுவரிடம் தொப்பியை வாங்கிச் செல்லும் போது கேப்டன் விராட் கோலியிடம் ஆவேசமாக ஆன்டர்சன் வாக்குவாதம் செய்தார். இதைத் தடுத்த நடுவர் தர்மசேனாவிடமும் ஆத்திரத்துடன் கத்திவிட்டு சென்றார்.

 

ஆன்டர்சனின் நடவடிக்கை குறித்து போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட்டிடம் நடுவர் தர்மசேனா புகார் செய்தார். இந்தப் புகாரில் உண்மை குறித்து ஐசிசி எலைட் பேனல் விசாரணை செய்ததில் அதில் உண்மை இருப்பது தெரியவந்தது.அதேசமயம், தான் செய்த குற்றத்தையும் ஆன்டர்ஸன் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து சர்வதேச போட்டிகளில் நடுவரின் முடிவை மீறி வீரர்கள் வாக்குவாதம் செய்வது என்பது, ஐசிசி ஒழுக்கவிதிமுறைகளை வீரர்கள் மீறியதாகும்.

ஐசிசி புதிய விதிமுறைகளின்படி, ஆன்டர்சனுக்கு ஒரு மைனஸ் புள்ளியுடன் ஆட்டத்தொகையில் 15% அபராதமும் விதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x