வலுவான பேட்டிங்குடன் வாருங்கள்: இந்திய அணிக்கு இயன் சேப்பல் எச்சரிக்கை

வலுவான பேட்டிங்குடன் வாருங்கள்:
இந்திய அணிக்கு இயன் சேப்பல் எச்சரிக்கை
Updated on
2 min read

இந்திய அணி சமீபத்தில் இங்கி லாந்து பயணத்தில் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இழந்தது. இதபோன்று ஆண்டின் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்கா வில் டெஸ்ட் தொடரை 2-1 என பறிகொடுத்தது. இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் ஆஸ்தி ரேலியாவுக்குச் செல்லும் இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 4 டெஸ்ட் போட்டி, 3 டி 20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் நவம்பர் 21-ம் தேதி தொடங்கி 2019-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி வரை நடக்கிறது.

இந்நிலையில் இந்தத் தொடர் குறித்து இணையதளம் ஒன்றுக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான இயன் சேப்பல் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

இந்திய அணி இழந்த மதிப்பை, மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆஸ்தி ரேலிய சுற்றுப்பயணத்தில் மீட்டெ டுக்க நினைக்கக்கூடும். ஆனால் அதற்கு முன்னர் இந்திய அணி பேட்டிங்கில் உள்ள குறைபாடு களை களைவது அவசியம். சிறந்த இரு வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் சஸ் பெண்ட் காரணமாக விளையாடாத தால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் கும் கேள்விக்குறியுடன்தான் உள் ளது. ஆனால், பந்து வீச்சு தாக்கு தல் இன்னும் வலுவாகவே உள்ளது.

மிட்சல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல் வுட், பாட்ரிக் கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் உடல்ரீதியாகத் தகுதிபெற்றுவிட்டால், இந்திய அணிக்கு சவால் நிறைந்த தொடராக அமைந்துவிடும். இங்கிலாந்தில் கேப்டன் விராட் கோலி தவிர்த்து மற்ற வீரர்களுக்கு அந்நாட்டு வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள் வது மிகவும் சிரமமாக இருந் தது. காற்றில் ஸ்விங் ஆகும் பந்துகள் தரையில் பட்டவுடன் வேறுவிதமாகத் திரும்பும்.

இதேபோன்று தான் ஆஸ்தி ரேலியாவில் இருக்கும். ஆனால் கூடுதலாக பந்துகள் பவுன்ஸ் ஆகும். ஆஸ்திரேலிய அணியின் திறமையை குறைத்துமதிப்பிட்டு இந்திய அணி டெஸ்ட் தொடரை எதிர் கொண்டால், எங்கள் அணி கொடுக் கும் தண்டனையை இந்தியா ஏற்கவேண்டியது இருக்கும்.

நம்பிக்கையுடன் விளையாடக் கூடிய மற்றும் சிறந்த பார்மில் உள்ள ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை எளிதாகச் சமாளித்து விளையாடக்கூடும். அவரின் தீர்க்கமான ஷாட்கள், பேட்டை நகர்த்தி ஆடும் விதம், பவுன்ஸர்களை கையாளும் விதம் ஆகியவை ஆஸ்திரேலிய பந்துவீச்சை எளிதாக எதிர்கொள்ள வைத்துவிடும். ஆனால் துரதிருஷ்ட வசமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர், பெரிய அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி வாய்ப்புகளை தவறவிட்டுள்ளது. அணியின் பேட்டிங் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. அதிலும் குறிப்பாக சவுத்தாம்டன் டெஸ்டில் சுழற் பந்து வீச்சில் மோசமாக விளையாடி னார்கள். தொடரை சமநிலைக்கு கொண்டுவருவதற்கு வாய்ப்பு இருந்தும் மொயின் அலியின் பந்து வீச்சை கூடுதல் திறனுடன் சமாளிக்க முடியாமல் வீழ்ந்தனர்.

புஜாராவை தவிர மற்ற எந்த வீரர்களுமே சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சு பாதையை கணித்து விளை யாட தங்களை தயார் செய்து கொள்ளவில்லை. பந்து வீச்சா ளர்கள் அற்புதமாக செயல் பட்ட நிலையில் மோசமான பேட்டிங்கால் தொடரை இழந்து வாய்ப்பை வீணடித்துள்ளது இந்திய அணி.

இவ்வாறு இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in