Published : 21 Sep 2018 09:12 AM
Last Updated : 21 Sep 2018 09:12 AM

கால் இறுதியில் பி.வி.சிந்து

சீன ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

சீனாவின் சாங்ஸோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் புசானன் ஒங்க்பாம்ருங்கனை 21-23, 21-13, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதியில் கால் பதித்தார்.

ஆடவர் பிரிவில் 8-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி காந்த், 28-ம் நிலை வீரரான தாய்லாந்தின் சுப்பன்யு அவிஹிங் சனனை 21-12 15-21, 24-22 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x