Published : 30 Sep 2018 06:29 PM
Last Updated : 30 Sep 2018 06:29 PM

இந்திய அணிக்கு விரைவில் சுழற்பந்து பயிற்சியாளர்; டெஸ்ட் தொடர் தோல்விக்கு ரவி சாஸ்திரி கூறிய காரணம் என்ன தெரியுமா?

இந்திய அணிக்கு விரைவில் பிரத்தியேக சுழற்பந்துப் பயிற்சியாளர் நியமிக்கப்பட உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து தொடர், ஆசியக் கோப்பை ஆகிய தொடர்களில் விளையாடிய இந்திய அணி வேகப்பந்துவீச்சைக் காட்டிலும், சுழற்பந்துவீ்ச்சுக்கு மிகவும் திணறியது. இங்கிலாந்தில் ஆதில் ரஷித், மொயின் அலி பந்துவீச்சுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் திணறினார்கள்.

ஆசியக்கோப்பையிலும் வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கன்அணிக்கு எதிரான போட்டிகளில் 30 ஓவர்களுக்கு மேல் வீசப்பட்ட சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளச் சிரமப்பட்டனர். இதைத் தவிர்க்கும் வகையில் சுழற்பந்துவீச்சுக்கு பிரத்தியேகமாக பயிற்சியாளர் நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகச் தி மும்பை மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய அணிக்கு தற்போது 55வயதான வேகப்பந்து பயிற்சியாளர் பரத் அருண் மட்டுமே உள்ளார். இதற்கு முன் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே இருந்தபோது, சுழற்பந்துப்பயிற்சியாளர் தனியாகத் தேவையில்லை என்ற நிலை இருந்தது. இப்போது, தனியாக சுழற்பந்துவீச்சாளர் தேவை என்ற சூழல் உருவாகியுள்ளது.

இந்திய அணிக்கு இப்போது தனியாக சுழற்பந்து பயிற்சியாளர் நியமிக்கவேண்டும் எனில் தகுதியானவர்களாக நரேந்திர ஹிர்வானி, ரமேஷ் பவார் ஆகியோர் உள்ளனர். ஆனால், ஹிர்வானி தற்போது தேசிய கிரிக்கெட் அகாடெமியின் சுழற்பந்து பயிற்சியாளராகவும், ரமேஷ் பவார் மகளிர் அணியின் பயிற்சியாளராகவும் இருக்கின்றனர்.

சுனில் ஜோஷி வங்கதேச அணியின் சுழற்பந்துப் பயிற்சியாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இதற்கிடையே, சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4-1 என்றகணக்கில் தோல்விஅ டைந்தது. இதுகுறித்து அறிக்கையைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது அறிக்கையை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள நிர்வாகிகள் குழுவிடம் தாக்கல் செய்தார். அப்போது, அவர்கள் தோல்விக்கான காரணத்தை ரவிசாஸ்திரியிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், டாஸ் போடுவதில் விராட்கோலி தவறான முடிவெடுத்ததால், தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. டாஸில் தோல்வி அடைந்ததால், தோல்வி அடைந்தோம் என்று தெரிவித்துள்ளதாகவும் தி மும்பை மிரர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x