முறிந்த கை, துணிச்சலான இதயம்: தமிம் இக்பாலுக்கு கேப்டன் பாராட்டு

முறிந்த கை, துணிச்சலான இதயம்:
தமிம் இக்பாலுக்கு கேப்டன் பாராட்டு
Updated on
1 min read

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடை பெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட் டத்தில் இலங்கை அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்க தேச அணி தோற்கடித்தது. துபை யில் நேற்று முன்தினம் நடை பெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச 49.3 ஓவர் களில் 261 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. முஸ்பிகுர் ரகிம் 144 ரன்களும், மொகமது மிதுன் 63 ரன்களும் விளாசினர். ஒரு ரன்னுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் இந்த ஜோடி அபாரமாக விளை யாடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

அதிலும் கடைசி கட்டத்தில் தமிம் இக்பால் இடது கை மணிக் கட்டில் காயம் ஏற்பட்ட நிலையிலும் ஒற்றை கையால் பேட் செய்து அணிக்கு பெரிய அளவில் உதவி னார். 2-வது ஓவரிலேயே காயம் காரணமாக அவர் வெளியேறிய நிலையில் 47-வது ஓவரில் மீண் டும் களமிறங்கி முஸ்பிகுர் ரகி முக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் வங்கதேச அணி கூடுதலாக 32 ரன்கள் சேர்த்தது.

262 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 35.2 ஓவர் களில் 124 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக உபுல் தரங்கா 27, திலுருவன் பெரேரா 29 ரன்கள் எடுத்தனர். வங்கதேச அணி தரப் பில் மோர்டசா, முஸ்டாபிஸூர் ரஹ் மான், மெஹதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

வெற்றி குறித்து வங்கதேச அணியின் கேப்டன் மோர்டசா கூறுகையில், “கடைசி நேரத்தில் காயத்தையும் பொருட்படுத்தாமல் தமிம் இக்பால் களமிறங்கி ஒரு கையால் பேட் செய்தது அவரது துணிச்சலைக் காட்டுகிறது. உடைந்த கையாக இருந்தாலும், உடையாத துணிச்சல் இதயத் தோடு அவர், களமிறங்கினார். அணிக்காக அவர் அர்ப்பணிப் புடன் களமிறங்கினார்.

முஷ்பிகுரின் பேட்டிங் இந்தப் போட்டியில் மிகச்சிறப்பாக இருந் தது, அவரின் சதத்தால், அணி யின் ஸ்கோர் உயர்ந்தது. ஆசியக் கோப்பையை நல்ல முறையில் தொடங்கி உள்ளோம்”

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in