Published : 24 Jun 2019 03:19 PM
Last Updated : 24 Jun 2019 03:19 PM

மெஸ்ஸி விட்ட எளிதான கோல் வாய்ப்பு:  கத்தாரை வீழ்த்தி கோப்பா காலிறுதிக்குத் தகுதி பெற்றது அர்ஜெண்டினா

கோப்பா அமெரிக்கா தென் அமெரிக்க கால்பந்துத் தொடரின் காலிறுதிக்கு மெஸ்ஸியின் அர்ஜெண்டினா தகுதி பெற்றது. கத்தாருடன் நடைபெற்ற போட்டியில் 2-0 என்று வெற்றி பெற்றது அர்ஜெண்டினா.

 

செர்ஜியோ அகியுரோ மற்றும் லவுதாரோ மார்டினேஸ் தலா 1 கோல் அடித்து அர்ஜெண்டினாவை காலிறுதிக்கு இட்டுச் சென்றனர்.

 

குரூப் ஸ்டேஜிலிருந்து முன்னேற அர்ஜெண்டினாவுக்கு ஒரு வெற்றி தேவைப்பட்ட நிலையில், அதற்கான வாய்ப்பை கத்தார் அணியின் தடுப்பணை வீரர் வழங்கினார், இவர் தவறுதலாக அர்ஜெண்டினாவின் மார்டினேஸிடம் பந்தை பாஸ் செய்ய. அதுவும் பெனால்டி பகுதிக்குள் இது நடக்க மார்டினேஸ், சாத் அல் ஷீபைத் தாண்டி வலைக்குள் திணித்து முதல் கோலை அடித்தார்.

 

அர்ஜெண்டினாவின் முன்னிலையை இரட்டிப்பாக்க அகுயெரோவுக்கு அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் தாழ்வான ஒரு ஷாட்டை கோலுக்கு வெளியே அடித்தார். 12 அடியிலிருந்து அடித்த ஷாட்டில் தவறிழைத்தார் அகுயெரோ .

 

முதல் பாதியில் அர்ஜெண்டினா அதிருப்தி தரும் விதத்தில் ஆட 2ம் பாதியில் எழுச்சி பெற்றது. ஆனாலும் கத்தார் கோல் கீப்பர் அல் ஷீப் இருமுறை அபாரமான சேவ் மூலம் அர்ஜெண்டினா முன்னிலைக்காக காக்க வைத்தார். இதில் ஒரு ஷாட் மிகவும் அருகிலிருந்து அடிக்கப்பட்டது, இன்னொன்று தூக்கி அடிக்கப்பட எம்பி கிராஸ்பாருக்கு மேல் தட்டிவிட்டார் அல்ஷீப்.

 

இது நடந்து 10 நிமிடங்களுக்குப் பிறகு ஸ்ட்ரைக்கர் லியோனல் மெஸ்ஸி அருமையான வாய்ப்பைக் கோட்டை விட்டார். மிகவும் அருகிலிருந்து  கோலை நோக்கி அடிக்கும் முயற்சியில் கிராஸ்பாருக்கு மேல் அடித்து கோல் வாய்ப்பை வீணடித்தார்.

 

இவற்றையெல்லாம் கடந்து 82வது நிமிடத்தில் அகுயெரோ தடுப்பு வீரரைக் கடைந்து பந்தை கொண்டு சென்று அல் ஷீப் பிடிக்க முடியாமல் கோலாக மாற்ற அர்ஜெண்டினா 2-0 என்று முன்னிலை பெற்றது.

 

இந்த வெற்றியையடுத்து பிரிவு ‘சி’யில் கொலம்பியாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அர்ஜெண்டினா ஜூன் 28ம் தேதி ரியோ டி ஜெனிரியோவில் மரகானாவில் வெனிசூலா அணியை காலிறுதியில் சந்திக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x