Published : 06 Jun 2019 05:57 PM
Last Updated : 06 Jun 2019 05:57 PM

ரோஹித் சர்மாவுக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டம் விளையாடியது: ஏமாற்றத்தில் தெ.ஆ. கேப்டன் டுப்ளெசிஸ் புலம்பல்

செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்கிறோம் இது பயங்கர உலகக்கோப்பையாக உள்ளது என்று தென் ஆப்பிரிக்காவின் 3 தொடர் தோல்விகளை அடுத்து கேப்டன் டுபிளெசிஸ் தெரிவித்தார்.

 

ரோஹித் சர்மா தொடக்கத்தில் ரபாடா, கிறிஸ் மோரிஸை தடுமாறியபடிதான் ஆடினார், ஒரு கேட்சை டுப்ளெசிஸ் ஆரம்பத்தில் விட்டார், பிறகு ஒரு கிறிஸ் மோரிஸ் பந்து எட்ஜ் ஆகி பாயிண்டில் டுமினிக்கு கொஞ்சம் பின்னே விழுந்தது, இது தூய அதிர்ஷ்டம். கடைசியில் 107 ரன்களில் இருந்த போது 10 ஓவர்களில் 57 ரன்கள் தேவை என்ற நிலையில் டேவிட் மில்லர் கையில் வந்த கேட்சை விட்டார். இடையில் ஒரு எல்.பி.தீர்ப்பு தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமாக அமையவில்லை.

 

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுப்ளெசிஸ் கூறியதாவது:

 

எங்கள் ஓய்வறை வேதனையுடனும் காயத்துடனும் உள்ளது, போராட்டக்குணத்தை வெளிப்படுத்த முயல்கிறோம், ஆனால் எப்போதும் நிறைய தவறுகள் இழைக்கிறோம்.

 

இந்தியப் பந்து வீச்சு அபாரமானது, நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஸ்பின்னர்கள் உள்ளனர். எங்கள் மிடில் ஆர்டரை முழுதும் காலி செய்வதற்கு முன்னர் நாங்கள் கொஞ்சம் எழுந்தோம்.

 

ரோஹித் சர்மாவுக்கு 2 கேட்ச்களை கோட்டை விட்டோம், அவருக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தது. ஆனால் ரோஹித் நாங்கள் செய்யாததைச் செய்தார், நின்றார் வென்றார்.

 

டாஸ் வென்று பேட்டிங் எடுத்ததற்குக் காரணம் லுங்கி இங்கிடி, ஸ்டெய்ன் இல்லை, அதனால் ஸ்பின்னர்களை அழைக்க வேண்டியதாயிற்று, அதனால் முதலில் பேட்டிங் செய்து விடுவோம் என்று நினைத்தோம்.

 

ரபாடா ஒரு சாம்பியன், துல்லியமாக வீசினார். இதுதான் கிரிக்கெட் சிறந்த கிரிக்கெட்டை ஆடாததால் 50-50 நல்ல திறன்களும் கூட வெற்றியடையாமல் போய்விடும். கிறிஸ் மோரிஸும் அருமை. முக்கிய கட்டத்தில் ரன்களையும் அடித்துக் கொடுத்தார்.

 

இவ்வாறு கூறினார் டுப்ளெசிஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x