Last Updated : 20 Jun, 2019 05:18 PM

 

Published : 20 Jun 2019 05:18 PM
Last Updated : 20 Jun 2019 05:18 PM

பாக். கிரிக்கெட் கமிட்டி தலைவர் மோசின் கான் திடீர் ராஜினாமா: பல்வேறு அதிரடி மாற்றங்களுக்குத் தயாராகும் பாக். கிரிக்கெட் வாரியம்

முன்னாள் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் மோசின் கான் தனது பாகிஸ்தான் கிரிக்கெட் கமிட்டி தலைவர் பதவியைத் துறந்தார். இந்த கமிட்டிதான் பாகிஸ்தான் அணி கடந்த 3 ஆண்டுகளாக ஆடிவரும் கிரிக்கெட் பற்றி சீராய்வு மேற்கொள்ளவிருக்கிறது.

 

இதில் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் ஆட்டம் பற்றியும் சீராய்வு செய்யப்படவுள்ளது.  மோசின் கான் பதவி விலகியதைத் தொடர்ந்து வாசின் கான் தலைவராக இருப்பார், இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இது குறித்து ஈசான் மானி கூறும்போது, “மோசின் கான் போன்ற ஒருவரை இழக்க விரும்பவில்லை, ஆனால் அவரது முடிவை மதிக்கிறோம். மோசின் கான் பங்களிப்புகளுக்கு நன்றிகள்” என்றார்.

 

ஆனால் வேறு ஒரு முக்கியப் பதவி மோசின் கானுக்கு காத்திருக்கிறது என்று கூறப்படுகிறது, பிரதமர் இம்ரான் கான் கேப்டன்சியில் ஆடிய இம்ரான் கானின் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய வீரராகத் திகழ்ந்தவர் மோசின் கான்.

 

மோசின் கான், மிஸ்பா உல் ஹக், வாசிம் ஆகியோர் பல்வேறு சானல்களில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மதிப்பீட்டாளர்களாக உள்ளனர். இவர்கள் ஏற்கெனவே சானல்களில் கேப்டன் சர்பராஸ் அகமட், பாக். அணி மீது தங்கள் கடும் விமர்சனங்களைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் என்பதும் கவனிக்கத் தக்கது.

 

உலகக்கோப்பை முடிந்தவுடன் சர்பராஸ் கேப்டன்சி பறிப்பு முதல் அணியில் பல மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீரர்களுக்கான புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x