Last Updated : 07 Jun, 2019 05:52 PM

 

Published : 07 Jun 2019 05:52 PM
Last Updated : 07 Jun 2019 05:52 PM

‘நான் தான் லிவர்பூல்’: மெஸ்ஸியை வெறுப்பேற்றும் அவரது மகன்

2018/19 சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் முதல் லெக்கில் லிவர்பூல் அணியை பார்சிலோனா 3-0 என்று வீழ்த்தியது, ஆனால் அப்போதே மெஸ்ஸி சொன்னார், அங்கு லிவர்பூலில் சென்று ஆடும்போது பெரிய சவால் காத்திருக்கிறது, இறுதிப் போட்டி நுழைவு உத்தரவாதம் இல்லை என்றார்.

 

அவர் கூறியது போலவெ லிவர்பூலில் சென்று பார்சிலோனா அணி 4-0 என்று உதை வாங்க கடைசியில் 4-3 என்று லிவர்பூல் அணி இறுதிக்குள் நுழைந்து கோப்பையையும் வென்றது.

 

இந்நிலையில் அர்ஜெண்டின நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் 3 மகன்களில் 2வது மான் மேத்தியூ, எப்போது வீட்டில் தன் தந்தை மெஸ்ஸியுடன் கால்பந்து ஆடினாலும் லிவர்பூல் தோல்வியை நினைவூட்டும் விதமாக ‘நான் லிவர்பூல், உன்னைத் தோற்கடிப்பேன்’ என்று கூறுவது வழக்கமாகி வருவதாக அர்ஜெண்டின இணையதளம் ஒன்றில் லியோனல் மெஸ்ஸி தெரிவித்தார்.

 

அதே போல் வாலென்சியா அணியிடம் தோற்றாயல்லவா, நான் தான் வாலென்சியா என்று மகன் மேத்தியு கேலி செய்வதாக மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் வாலென்சியாவிடம் பார்சிலோனா 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது.

 

அதே போல் மெஸ்ஸியின் 2வது மகன் மேத்தியு, எப்போதும் தன் சகோதரன் தியாகோவை வெறுப்பேற்றும் விதமாக ரியால் மேட்ரிடை ஆதரித்து பேசுவதும் வழக்கமாம்.  “மேத்தியு ரியால் மேட்ரிட் ஆடும்போது தொலைக்காட்சியில் அதன் கோல்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவான், தன் அண்ணனை வெறுப்பேற்றுவதற்காகவே” என்றார் மெஸ்ஸி.

 

அர்ஜெண்டினா கேப்டனான மெஸ்ஸி கோப்பா அமெரிக்கா என்ற தென் அமெரிக்க நாடுகளின் மிகப்பெரிய கால்பந்து திருவிழாவுக்கு தயாராகி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x