Published : 16 Jun 2019 06:22 PM
Last Updated : 16 Jun 2019 06:22 PM

அதிவிரைவில் ஒருநாள் 11,000 ரன்கள்: விராட் கோலி உலக சாதனை- சச்சின் டெண்டுல்கரை முறியடித்தார்

மான்செஸ்டர் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி பிரமாதமாக ஆடிவருகிறது. ரோஹித் சர்மா 114 பந்துகளில் 140 ரன்கள் விளாச ராகுல் அரைசதம் அடிக்க விராட் கோலி 70 ரன்களுடன் ஆடிவருகிறார்.

 

இந்தப் போட்டியில் கிங் கோலியின் மகுடத்தில் இன்னொரு சாதனை சேர்ந்துள்ளது.

 

ஹசன் அலி ஓவரில் லெக் திசையில் ஒரு பந்தை வீச அதனை மிக அழகாகாத் தொட்டார்  பந்து பவுண்டரிக்குச் சென்றது. கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவிரைவாக 11,000 ரன்களைக் கடந்தார்.

 

இதன் மூலம் அதி சிறந்த வீரர்களான சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோரை மிகவும் பின்னுக்குத் தள்ளியுள்ளார் விராட் கோலி.

 

சச்சின் டெண்டுல்கர் 11,000 ரன்களை எடுத்ததைக் காட்டிலும் 54 இன்னிங்ஸ்கள் குறைவாக எடுத்துக் கொண்டார் விராட் கோலி.

 

சச்சின் டெண்டுல்கர் 276 இன்னிங்ஸ்களில் 11,000 ரன்களை எட்டி சாதனையை வைத்திருந்தார், விராட் கோலி 222 போட்டிகளில் எட்டி அவரை முறியடித்தார்.

 

ரிக்கி பாண்டிங் 286 இன்னிங்ஸ்களில் 11,000 ரன்களையும் சவுரவ் கங்குலி 288 இன்னிங்ஸ்களிலும் 11,000 ரன்களையும் எடுத்துள்ளனர்.

 

இவர்களை மிகவும் பின் தங்கச் செய்துள்ளார் விராட் கோலி.  இதுவரை விராட் கோலி 41 சதங்களையும் 50 அரைசதங்களையும் எடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x