

மான்செஸ்டரில் இன்று நடக்கும் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார்.
இந்த போட்டி மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த போட்டியில் தோல்வி அடைந்தால், உலகக் கோப்பை லீக் சுற்றோடு ஹோல்டர் தலைமையிலான அணி சொந்த நாட்டுக்கு திரும்பவேண்டியதுதான். ஆதலால், மே.இ.தீவுகள் அணிக்கு வெற்றிகட்டாயாம்.
இந்தியஅணி 9 புள்ளிகளுடன் இருக்கிறது, அரையிறுதிச்சுற்றை தக்கவைக்க இந்த போட்டியில் வெற்றி அவசியம் என்பதால் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாகப் போராடும்.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்தார். இந்திய அணியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. புவனேஷ்வர் குமாருக்கு ஏற்பட்ட காயம்முழுமையாக குணமடையதாததால் அவரின் இடத்தில் ஷமி விளையாடுகிறார். விஜய் சங்கரும் அணியில் தொடர்கிறார்.
மேற்கிந்தியத்தீவுகள் அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எவின் லூயிஸ், ஆஷ்லே நர்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டு அம்பரிஸ், பேபியன் ஆலன் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆடுகளம் எப்படி:
நியூஸிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்த அதே ஆடுகளத்தைப் போன்றே இருக்கும். இரு அணிகளும் நன்றாக ஸ்கோர் செய்ய முடியும். ஸ்குயர் பவுண்டரி மிகவும் குறுகியதாக இருக்கும், பந்துகள் மெதுவாக பேட்ஸ்மேனை நோக்கிவரும், சுழற்பந்தவீச்சுக்கு சாதகமாக இருக்கும். வானம் தெளிவாக இருப்பதால், வெயில் அடிக்கும் போது, அதிகமான பேட்டிங்கிற்கு ஆடுகளம் ஒத்துழைக்கும்