இந்திய அணிக்கு ஷிகர் தவண் உணர்ச்சிகர ‘மெசேஜ்’

இந்திய அணிக்கு ஷிகர் தவண் உணர்ச்சிகர ‘மெசேஜ்’
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றிக்கு வித்திட்ட அபார சதத்துக்குப் பிறகு காயமடைத ஷிகர் தவண் உலகக்கோப்பையில் இனி வரும் ஆட்டங்களில் ஆட முடியாமல் விலகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“இந்த ஐசிசி உலகக்கோப்பை 2019-ல் நான் இனி ஓர் அங்கம் அல்ல என்பதை உணர்ச்சிபூர்வமாக அறிவிக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக என் பெருவிரல் காயம்  நேரத்திற்குக் குணமடையவில்லை. ஆனால் உலகக்கோப்பையில் நம் அணியின் பயணம் தொடரட்டும். என் அணி சகாக்கள், கிரிக்கெட் விரும்பிகள் மற்றும் நாடு முழுதும்  என் மீது காட்டிய அன்புக்கும் பரிவுக்கும் நான் நன்றிக்கடன் பட்டவனாகிறேன். ஜெய் ஹிந்த்” என்று தவண் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜூன் 9ம் தேதியன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஷிகர் தவண் 117 ரன்களை எடுத்து வெற்றிக்கு வித்திட்ட போட்டியில் பந்து ஒன்று தாக்க பெருவிரலில் மெல்லிய எலும்பு முறிவு ஏற்பட்டது.

இவர் இனி இந்த உலகக்கோப்பையில் பங்கேற்க முடியாது என்று கூறிய டீம் இந்தியா மேனேஜர் சுனில் சுப்ரமணியம்  “ஷிகர் தவண் இடது கை பெருவிரலில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.  ஜூலை மத்தி வரை அவர் சிகிச்சையிலும் ஓய்விலும் இருப்பது அவசியம் ஆகவே உலகக்கோப்பையிலிருந்து அவர் விலகுகிறார். ரிஷப் பந்த்தை அவருக்குப் பதிலாக அழைத்துள்ளோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in