இது வெறும் விளையாட்டு: இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து சானியா காட்டம்

இது வெறும் விளையாட்டு: இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து சானியா காட்டம்
Updated on
1 min read

இது வெறும் விளையாட்டு. நீங்கள் இதற்கு மேலும் இதனை விளம்பரப்படுத்தத் தேவையில்லை என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை போட்டிகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் ஊடகங்கள் மாறி மாறி விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாஸ் டிவி, அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டபோது சமூக வலைதளங்களில் வைரலான உரையாடலை நகைச்சுவையான முறையில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்துடன் தொடர்புபடுத்தி வெளியிட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டது.

இந்த விளம்பரத்துக்கு இந்திய ரசிகர்களும் சமூக வலைதளங்களில் எதிர்வினை ஆற்றினர்.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய டென்னிஸ் வீராங்கனையும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீர்ர சோயப் மாலிக்கின் மனைவியுமான சானியா மிர்சா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சானியா தனது ட்விட்டர் பக்கத்தில், “இருதரப்பிலிருந்தும் தர்மசங்கடமான விளம்பரங்கள் உள்ளன. நீங்கள் இந்த விளையாட்டை இதற்கு மேலும் விளம்பரப்படுத்தத் தேவையில்லை. .குறிப்பாக குப்பையாக. ஏற்கெனவே போதுமான அளவு கவன ஈர்ப்பு பெற்றுவிட்டது.

இது வெறும் விளையாட்டு. ஒருவேளை நீங்கள் இதை விளையாட்டைவிடப் பெரிதாக நினைத்தால்... வாழ்க்கையைத் தேடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in