

ஒருநாள் போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என்பதை இந்திய வீரர்களிடம் இருந்து இங்கிலாந்து வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் அலெக்ஸ் ஸ்டூவர்ட் கூறியுள்ளார்.பிரிட்டனில் இருந்து வெளியாகும் தி மிரர் பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பது:
டெஸ்ட் போட்டியில் மோசமாக தோல்வியடைந்த இந்திய அணி ஒருநாள் போட்டியில் அடைந்துள்ள எழுச்சி வியப்பை ஏற்படுத்துகிறது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை திணறடிக்கும் வகையில் இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடுகின்றனர். டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்விகளை சந்தித்த அணி இதுதானா என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு இந்திய வீரர்கள் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
ஒருநாள் போட்டியில் எப்படி விளையாடி வேண்டும் என்று இங்கிலாந்து வீரர்களுக்கு அவர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர். எந்த ஒரு இங்கிலாந்து பந்து வீச்சாளரையும் ஆதிக்கம் செலுத்தவிடாமல் செய்வதுதான் இந்திய பேட்ஸ்மேன்களின் சிறப்பம்சம். கிறிஸ் வோக்ஸ், ஹேல்ஸ் ஆகியோரது ஆட்டம் மட்டும் இங்கிலாந்து அணியில் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது என்று ஸ்டூவர்ட் கூறியுள்ளார்.