Last Updated : 01 Jun, 2019 11:56 AM

 

Published : 01 Jun 2019 11:56 AM
Last Updated : 01 Jun 2019 11:56 AM

இதெல்லாம் ஒரு போட்டியா?- எங்கள் ஆக்ரோஷ விளையாட்டை இனி பாருங்கள்: ஹோல்டர் உற்சாகம்

பாகிஸ்தானுடன் நாங்கள் விளையாடியது ஒரு போட்டியா, இனிவரும் போட்டிகளில் எங்களின் ஆக்ரோஷமான ஆட்டத்தைப் பாருங்கள் என்று மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டித் தொடர் தொடங்கி வருகிறது. நாட்டிங்ஹாமில் நேற்று நடந்த 2-வது ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பாபர் ஆசம், பக்கர் ஜமான் தலா 22 ரன்கள் சேர்த்தனர்.

மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் ஓஸ்னோ தாமஸ் 4 விக்கெட்டுகளையும், ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், ரஸல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

106 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. கெயில் அதிரடியாக ஆடி 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டம் ஒருதரப்பாக அமைந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. அதேசமயம் உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடுவோம் எனத் தெரிவித்துவந்த பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதும் அதிரச்சி அளித்தது

இந்தவெற்றி குறித்து மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எங்களைப் பொறுத்தவரை இது ஒருபோட்டியே அல்ல. எங்களின் ஸ்டெல் இப்போது ஆக்ரோஷமாக களத்தில் விளையாடுவதுதான். எங்களுக்கு எதிராக எந்த அணி விளையாடினாலும், உச்சபட்சமாக ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம், சில நேரங்களில் விக்கெட்டுகளையும் வீழ்த்துவோம்.

இன்றைய நவீன கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸ் முழுவதும் எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்தாமல், எதிரணியை நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாது. ஆதலால், தொடக்கத்தில் ரன்களைக் கொடுத்தாலும், விக்கெட்டுகளை வீழ்த்துவோம்

நாங்கள் தொடர்ந்து ஆக்ரோஷமாக இருக்கவே விரும்புகிறோம். நாங்கள் மட்டுமல்ல இந்த தொடரில் விளையாடும் அனைத்து அணிகளும் எதிரணியின் விக்கெட்டை வீழ்த்த ஆக்ரோஷமாகத்தான் பந்துவீசுகிறார்கள்.

ஆனால், எந்த மாதிரியான பந்துவீச்சை தேர்வு செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அது சுழற்பந்துவீ்ச்சாக இருக்காலம், அல்லது வேகப்பந்துவீச்சாக இருக்கலாம். நாம் எவ்வாறு வீசுகிறோம் என்பதுதான் முக்கியம்.

இந்த தொடரில் எந்த அளவுக்கு நாங்கள் செல்வோம் என்று இப்போதே கூற முடியாது. அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியை சந்திக்கிறோம். நான் அணி வீரர்களிடம் கூறியுள்ளது என்னவென்றால், இந்த தொடர் நமக்கு நீண்ட தொடராக இருக்க வேண்டும், எளிதாக வெளியேவந்துவிடக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறேன்.

பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் நிலைத்தன்மையுடன் இருப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். எங்களால் முடிந்த அளவு சிறப்பாக செயல்படுவோம்.

பாகிஸ்தானுக்கு எதிராக எங்கள் வீரர்கள் தாமஸ், ரஸல் இருவரும் நன்றாக பந்துவீசினார்கள். புதிய பந்தில் விரைவாக விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். நாங்கள் வீழ்த்திய விக்கெட்டால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் அதன்பின் மீண்டு எழ முடியவில்லை. கெயில் சூழலுக்கு ஏற்றார்போல் பேட் செய்தார், அவருக்கு பூரனும் நன்கு ஒத்துழைத்தார்.

இவ்வாறு ஹோல்டர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x