டாஸ் வென்றது இந்தியா: அணியில் ரிஷப்பும் இல்லை, கார்த்திக்கும் இல்லை

டாஸ் வென்றது இந்தியா: அணியில் ரிஷப்பும் இல்லை, கார்த்திக்கும் இல்லை
Updated on
1 min read

சவுத்தாம்டனில் இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

உலகக்கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டங்கள் நடந்து வருகின்றன. சவுத்தாம்டனில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து மோதுகிறது ஆப்கானிஸ்தான் அணி.

இந்திய அணியில் காயம் காரணமாக ஷிகர் தவண் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். பயிற்சியின் போது பும்ரா வீசிய யார்கரில் விஜய் சங்கர் காயமடைந்தார். இதனால் இன்று விஜய் சங்கர் விளையாடுவாரா  என்ற கேள்வி எழுந்தது.

ஒருவேளை விஜய் சங்கர் விளையாடாவிட்டால், அவருக்கு பதிலாக ரிஷப்பந்த், தினேஷ் கார்த்திக் இருவரில் யார் சேர்க்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், விஜய் சங்கர் உடல்நலம் குணமடைந்துவிட்டதால், இன்றைய ஆட்டத்தில் விளையாடுவதால், ரிஷப் பந்த், தினேஷ் கார்திக் இருவருக்கும் வாய்ப்பில்லை.

காயமடைந்த புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக, முகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளார். இது மட்டுமே மாற்றமாக இந்திய அணியில் இருக்கிறது. மற்றவகையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

pitchjpgபடம் உதவி பிசிசிஐ100 

ஆடுகளம் எப்படி?

சவுத்தாம்டன் மைதானம் மிகப்பெரியது. ஸ்ட்ரைட் பவுண்டரி அடிக்க 80 மீட்டர்கள் அடிக்க வேண்டும். அதேசமயம், தேர்டு மேன், ஃபைன்லெக் பக்கத்தில் இருக்கிறது. ஆதலால், குறுகிய தொலைவில் இருக்கும் பவுண்டரிகளை தடுக்க அணிகள் முயல வேண்டும்.

ஆடுகளம் நன்றாக காய்ந்து தட்டையாக இருக்கிறது. பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைக்கும், வேகப்பந்துவீச்சைக் காட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்கள் நன்றாக வீசலாம். முதல் 5 ஓவர்களுக்குப்பின் அதன்பின் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறும். சவுத்தாம்டனில் வானம் தெளிவாக இருப்பதால், மழைக்கு வாய்ப்பில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in